Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 12, 2017

தகாத காதல் உறவுகளை பேணிய பொலிஸ் அதிகாரியின் ஆணுறுப்பை துண்டாக வெட்டிய பெண்.


தனது காதலியால், பொலிஸ் அதிகாரி ஒருவரின் அந்தரங்க உறுப்புத் துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று, மின்னேரியாவில் இடம்பெற்றுள்ளது.

மின்னேரியா பொலிஸ் நிலையத்தில் க​டமையாற்றும் அநுராதபுரம் - கஹட்ட கஸ்திகிலிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையே, இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி, பெண்ணொருவருடன் திருமணத்துக்குப் புறம்பான தொடர்பை, நீண்ட காலமாகப் பேணி வந்துள்ளார்.

இந்நிலையில், இந்த பெண்ணுக்கும் தெரியாமல், பிறிதொரு பெண்ணுடனும் இரகசியத் தொடர்பைப் பேணி வந்துள்ளார்.

இதனை அறிந்து ஆத்திரம் கொண்ட அப்பெண், குறித்த பொலிஸ் அதிகாரியின் அந்தரங்க உறுப்பை துண்டாக  வெட்டியுள்ளார்.

இதையடுத்து, குறித்த பெண்ணை, ​ஹிங்ராகொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பெண், ஹிங்குரகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதில் படுகாயங்களுக்குள்ளான பொலிஸ் அதிகாரி, ஹிங்குரகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.