April 22, 2017
டெல்லியில் தமிழக விவசாயிகள் உச்சகட்டமாக சிறுநீர் குடிக்கும் போராட்டம். கருணை இல்ல மத்திய மாநில அரசுகள்
டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழகவிவசாயிகள் இன்று கொடுமையின் உச்சகட்டமாக சிறுநீர் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் இன்று சிறுநீர்குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் கடன்களை தள்ளு படி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் டெல்லி யில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாள் தோறும் வித்தியாசமான போராட் டங்களை விவசாயிகள் நடத்தி வரு கின்றனர். எலிக்கறி, பாம்புக் கறி தின்றது, பாதி தலை மொட்டையடித் தது, சேலை அணிந்து ஊர்வலம் என இதுவரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் இன்று தங்கள் சிறுநீரை தாங்களே குடிக்கும் வகையில் ஒரு பாட்டிலில் சிறுநீரை பிடித்து வைத்து அவற்றை குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளை பிரதமர் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தாத வரை போராட்டம் ஓயாது என்று விவசாயிகள் போராடி வருகின்றனர்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் உச்சகட்டமாக சிறுநீர் குடிக்கும் போராட்டம். கருணை இல்ல மத்திய மாநில அரசுகள்
Reviewed by மறத்தமிழன்
on
April 22, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.