Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 24, 2017

புதிய அணு உலைகள் அமைக்க எதிர்த்து வழக்கு… மத்திய அரசு பதில் தர சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்


கூடங்குளத்தில் புதியதாக 4 அணு உலைகள் அமைக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கூடங்குளத்தில் 4 புதிய அணு உலைகள் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுஉலை பூங்கா வளாகத்தில் அமைய உள்ள 3 மற்றும் 4-வது அலகு மற்றும் 5 மற்றும் 6வது அலகுகள் அமைப்பதற்கு, கடந்த 2012ம் ஆண்டு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.

தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க உத்தரவு- வீடியோ..
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அவர்கள் அளித்துள்ள மனுவில் அணு உலை விபத்து ஏற்பட்டால் அரசு பல லட்சம் கோடி இழப்பீடாக வழங்க வேண்டி வரும் என்றும் அதற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்தில் பெற வேண்டும் என்றும் அப்படி ஒப்புதலைப் பெறுவதற்கான வழிவகை கூடங்குளம் ஒப்பந்தத்தில் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தன. இந்த அணு உலை மக்களுக்கு எதிரானது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு இன்று விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டில் வந்தது. அப்போது மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ஜூலை மாதத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.