April 26, 2017
சென்னையில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த தாய்–மகள் கழுத்து அறுத்து படுகொலை
அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த தாய், மகள் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த தாய், மகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு பணம் மற்றும் நகைகள்கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் மகாலட்சுமி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் ஹேமலதா தனது மகள் ஜெயலட்சுமியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் இவர்கள் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டம் விட்ட கொள்ளை கும்பல் ஒன்று ஹேமலதா வீட்டிற்கு சென்றது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஹேமலதா, ஜெயலட்சுமி ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகை, பணத்திற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த தாய், மகள் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த தாய்–மகள் கழுத்து அறுத்து படுகொலை
Reviewed by மறத்தமிழன்
on
April 26, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.