Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 13, 2017

விமானத்தில் இருந்து தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட விமான பயணி - வீடியோ இணைப்பு


அமெரிக்காவில் சிகோகோ நகர சர்வதேச விமான நிலையத்தில் யுனைட்டெட் எக்ஸ்பிரஸ் விமானம் பயணிகளால் நிரம்பி வழிந்தது. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதை கண்டறிந்த அந்த விமான நிறுவனம், 4 பயணிகளை தாமாக முன்வந்து இறங்குமாறு கேட்டுக்கொண்டது.

அப்படி இறங்குகிற பயணிகளுக்கு தலா 400 டாலர் (சுமார் ரூ. 26 ஆயிரம்) தருவதாக கூறியது. யாரும் முன்வரவில்லை.
 அடுத்து தலா 800 டாலர் (சுமார் ரூ.52 ஆயிரம்) தருவதாக கூறியது. அப்படியும் யாரும் முன்வரவில்லை.கடைசியில் அந்த நிறுவனமே 4 பயணிகளை தேர்ந்தெடுத்து வெளியேற்ற முடிவு செய்தது.

அதன்படி 3 பயணிகள் வெளியேறினர்.4-வதாக வெளியேற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பயணி வெளியேற மறுத்தார். அவர் 'நான் வீட்டுக்கு செல்ல வேண்டும், வீட்டுக்கு செல்ல வேண்டும்' என்று கதற கதற விமானத்தில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டார். அவரது உதட்டில் ரத்தம் வடிந்தது.

இதை ஒரு பயணி ரகசியமாக படம் பிடித்து ஆன்லைனில் வெளியிட அது வைரலாக பரவியது. அதைக்கண்டவர்கள் விமான நிறுவனம் மீது ஆத்திரம் அடைந்தனர்.

இனி அந்த விமான நிறுவனத்தை புறக்கணிப்போம் என்று அவர்கள் சமூக வலைத்தளங்களில் கொதித்தெழுந்தனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

அந்நிறுவனம் தரப்பில், நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினால் மட்டும் போதாது. ஊழியர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூகவலைதளத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து அந்தப் பயணியை இழுத்து சென்ற விமான பாதுகாப்பு ஊழியர் விடுமுறையில் அனுப்பப்பட்டார் என தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.