April 20, 2017
எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா..! பன்னீர் முதல்வராக பதவியேற்க பணிகள் தீவிரம்..!!
ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா அணி, பன்னீர் அணி இரண்டாக பிளவு பட்டது. இப்போது அதே சசிகலா அணி இரண்டாக பிரிந்து எடப்பாடி தலைமையில் புதிய கோஷ்டி உருவாகி உள்ளது.
இதனை தொடர்ந்து பன்னீர் செல்வம், எடப்பாடி அணிகள் இணைந்து ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதில் சசிகலா குடும்பத்தினர் யாருக்கும் இடம் கிடையாது.
மேலும் டெல்லி நெருக்கடிக்கு பயந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை விட்டு தரவும் தயாராக உள்ளார். அவர் எந்த நேரத்திலும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் பதவியை விட்டு தராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பா.ஜ மேலிடம் எச்சரித்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் எந்த நேரத்திலும் மீண்டும் பன்னீர் செல்வம் முதல்வராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எப்படி எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கடிதத்தை பெறுவது என்ற குழப்பத்தில் உள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி. இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும் புதிய அமைச்சரவையில் யார் யாரை சேர்ப்பது என்பது குறித்த ஆலோசனை ஒரு பக்கம் நடந்து வருகிறது. நிதித்துறை உள்பட 5 முக்கிய இலாக்களை பன்னீர் செல்வம் அணியினர் கேட்டு இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி குழப்பத்தில் உள்ளாராம்.
எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா..! பன்னீர் முதல்வராக பதவியேற்க பணிகள் தீவிரம்..!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 20, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.