Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2017

மொபைல் டாஸ்மாக் அழகிகள்! நெடுஞ்சாலைகளில் படு ஜோர்! குடிமகன்கள் குஷி!


தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற கோரி அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து குடிமகன்களை வளைக்க பார் உரிமையாளர்கள் புது வியூகம் அமைத்துள்ளனர்.
லாரி, டெம்போ போன்ற சரக்கு வாகனங்களில் வரும் டிரைவர்கள் நெடுஞ்சாலலைகளில் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு சரக்கு தேடி ஆளாய் அலைகின்றனர்.
இதனை தங்களது சாதகமாக மதுக்கடைகளின் பார் உரிமையாளர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர். பாரில் எடுபிடி வேலைபார்க்கும் ஊழியர்களை கொண்டு ஊருக்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகளிலிருந்து சரக்குகளை வாங்கி வந்து டுவீலர்களில் மொபைல் யூனிட்களாக விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.
அந்த மொபைல் யூனிட்டில் ஒரு குவார்ட்டர் விலை டாஸ்மாக் விலையை விட ரூ.50 கூடுதலாக வைத்து விற்பனை செய்கிறார்கள். குடிமகன்களோ பணமா முக்கியம் சரக்குதான் முக்கியம் என்று கூறுகின்றார்.
இதில் மொபைல் யூனிட் விற்பனையாளர்கள் தங்களுக்குள் ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட் வேறு போட்டுள்ளார்கள். அதாவது அவரவர் எல்கைக்குள் வியாபாரம் செய்து கொள்ள வேண்டும்.
இந்நிலையில் வசிதியான ஏசி பார் உரிமையாளர்கள் ஒருபடி மேலே போய் மொபைல் யூனிட் அழகிகள் என்ற புது வியூகத்தை செயல்படுத்தி வருகிறார்கள். தங்கள் மொபைல் யூனிட்டிற்கு ஒருசில அழகிகளையும் நியமித்திருக்கிறார்கள்.
டிப்டாப்பாக மேக்அப் போட்டு கொண்டு ஸ்கூட்டியில் வலம் அந்த பியூட்டிகள் மொபைல் யூனிட் டாஸ்மாக் அழகிகளாக வலம் வருகிறார்கள். இதனால் நெடுஞ்சாலை குடிமகன்கள் குஷியாக உள்ளனர்.
இதுகுறித்து ஹைவே பேட்ரோல் போலீசார் கூறுகையில், நெடுஞ்சாலைகளில் தினமும் ரெய்டு நடத்துகிறோம். ஒரு டுவீலரையும் விடுவதில்லை. ஆனாலும் ஒரு சிலரே கையும் களவுமாக பிடிபடுகிறார்கள் என்றும் கூறிகின்றனர்.
மேலும் தலைவலி போய் திருகுவலி வந்ததுபோல் ஆகிவிட்டது. டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் கள்ளச்சாராயம் மீண்டும் தலைதூக்கும் என்பதையே மேற்கண்ட நடவடிக்கைகள் காட்டுகின்றன

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.