Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 12, 2017

இது யாரோட மொபைல்ங்க ? ஒரு குட்டிக்கதை.


நானும் என் நண்பனும் பாரில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம் அப்போது அருகில் ஒருவர் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். ஸ்பீக்கர் ஆனில் இருந்த்தால் மறுமுனையில் பேசிய அவர் மனைவியின் குரல் தெளிவாக கேட்டது.

"ஏங்க…நான் இப்ப ஷாப்பிங் மால் உள்ளே இருக்கேன். நான் சொன்னேனே.. டிஜிட்டல் கேமரா.. இங்க இருக்குங்க... இருபதாயிரம்தான் விலை.
வாங்கிகட்டுமா...?"

"வாங்கிக்க...!"

"அப்புறம்... நான் கேட்டேனே ஒரு
வைர நெக்லஸ்... அதுவும் இங்க இருக்குங்க... விலைதான்  ஒண்ணரை லட்சம் சொல்றான்..."

"ஒண்ணரை லட்சம்தான... உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க...!"

“அப்புறம் ஒரு புடவை  பார்த்தேன் ரொம்ப காஸ்ட்லியா சொல்றான்”

“ரேட்ட பார்க்காதேமா உனக்கு புடிச்சி இருந்தா வாங்கிறுமா ”

"ஏங்க... அப்புறம் நாம பார்த்தமே ஒரு கார் ... இப்ப  ஆஃபர் போட்டிருக்காங்க... விலை பதினெட்டு லட்சம் சொல்லறான்... உங்க செக் இருக்கு குடுத்துறவா..?"

"ஓகேமா…… இதுலாம் கேக்கலாமா உனக்கு புடிச்சிருந்தா போதும  "

"ஓகேங்க... சீக்கிரம் விட்டுக்கு வாங்கன்னு ..." என்று கொஞ்சலாய்ச் சொல்லிவிட்டு மறுமுனையில் ஃபோனை வைத்தாள் மனைவி.

இவரும் ஃபோனைச் சிரித்தபடியே வைத்துவிட்டுத் திரும்பினார்.

ஒரே நாளில் இவ்வளவு பர்ச்சேஸா... நாங்கள் மிரண்டு போய்ப் பார்த்துகொண்டிருக்க, எங்களை பார்த்து சிரித்தபடியே  கேட்டாரே ஒரு கேள்வி….

"யாரோட மொபைல்ங்க   இது..?".

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.