April 24, 2017
ஜெயலலிதா சாவின் மர்மத்தை அறிந்ததாலா..? ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை..!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் வாயிலில்,
பாதுகாப்புக்கு நின்ற காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, சுமார் 850 ஏக்கர் பரப்பளவில் கோடநாடு எஸ்டேட் அமைந்துள்ளது.
இந்த எஸ்டேட்டின் 9-வது வாயில் அருகே, காவலாளிகள் இருவர் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர்.
ஓம்கார் என்பவர், அங்குள்ள பங்களாவில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்தார்.
ஓம்கார், நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
நள்ளிரவில், காரில் வந்த மர்ம கும்பல் இவரைக் கொலைசெய்துவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்படும் பட்டியலில், கொடநாடு எஸ்டேட் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்த எஸ்டேட் தற்போது, டி.டி.வி.தினகரனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சோளூர் மட்டம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில்,
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்
ஜெயலலிதா சாவின் மர்மத்தை அறிந்ததாலா..? ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 24, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.