Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2017

உதவ மறுக்கும் விஜயகாந்த் உறவுகள்! மருத்துவமனையில் விஜயகாந்த் குடும்பம் கவலை!!


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்துக்கு சில மருத்துவ ரீதியான உதவிகளை உறவினர்கள் செய்ய மறுத்து வருகிறார்களாம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ ரீதியாக சில உதவிகளை ரத்த உறவுகள் செய்ய மறுத்துவருவதால் அவரது குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த் அண்மையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சிகிச்சை பல நாட்களாக நீடித்தது.

ஆர்கே நகர் பிரசாரம் இதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆர்கே நகர் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தார். ஒருநாள் மட்டுமே விஜயகாந்த் பிரசாரம் செய்த நிலையில் இடைத்தேர்தலே ஆர்கே நகரில் ரத்து செய்யப்பட்டது.

உறவுகளிடம் உதவி இந்த அறிவிப்புக்குப் பின்னர் மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது விஜயகாந்தின் ரத்த உறவுகளிடம் மருத்துவ ரீதியாக சில உதவிகளை பிரேமலதா உள்ளிட்டோர் கேட்டிருந்தனராம்.

உறவுகள் அதிருப்தி ஆனால் விஜயகாந்த் செல்வாக்குடன் இருந்த காலத்தில் எங்கள் பக்கமே எட்டிப்பார்க்கவிடமால் வைத்திருந்துவிட்டு இப்போது வந்து வாசல் கதவை தட்டுவதா? என கோபத்தில் இருக்கின்றனராம் ரத்த உறவுகள். இதில் கலங்கிப் போனதாம் விஜயகாந்த் குடும்பம்.

வெளிநாட்டில் சிகிச்சை? இருப்பினும் விடா முயற்சியாக ரத்த உறவுகளின் ஒத்துழைப்பைப் பெற தீவிரமாக முயற்சித்து வருகிறதாம் விஜயகாந்த் குடும்பம். இதனைத் தொடர்ந்து வெளிநாடு ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்கின்றன தேமுதிக வட்டாரங்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.