Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 24, 2017

ஓ.பி.எஸ் அணியுடன் பேச ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்தார் முதல்வர் பழனிசாமி!


ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச, எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.




'அ.தி.மு.க-வின் இரு அணிகளும் மீண்டும் சேர பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதையடுத்து, சசிகலா அணியைச்சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். ஆனால், சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை ஒன்றை முன்வைத்தார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் ஆலோசனை நடத்தினர். அதன்பின், டி.டி.வி.தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டதாக அறிவித்தனர்.
தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக முடக்கிவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் முயற்சியில், இரு அணிகளும் இறங்கி உள்ளன. அதற்கு முன், கட்சி இணைப்பு, பதவிகள் குறித்து இரு தரப்பிலும் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வைத்தியலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன்,ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட ஏழு பேர் உள்ளனர்.
இதற்கிடையே தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தளவாய் சுந்தரம் சந்தித்து பேசினார்.
Dailyhunt

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.