தமிழக விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மேட்டூர் அணை. காவிரியின் குறுக்கே கட்டப்பட் டுள்ள மேட்டூர் அணை தமிழக விவசாயத்தின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. மொத்தம் 120 அடி உயரம் கொண்ட அணையானது 93.470 டிஎம்சி நீர் கொள்ளவை கொண்டது. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை இருந்து வருகிறது.

கடந்த 2005-ம் ஆண்டு மேட்டூர் அணை நிரம்பி 121.500 அடி முழுக் கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு முழுக்கொள்ளளவை அணை எட்டவில்லை. பருவமழை பொய்த்ததால், கடந்த 2016-ம் ஆண்டு மேட்டூர் அணையில் அதிகபட்சம் 75 அடி நீர் தேங்கியது. தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில், மேட்டூர் அணையில் 24 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
அணைக்கான நீர்வரத்து முழுவதுமாக நின்று விட்ட நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப் படுவதால், அணை நீர்மட்டம் வேகமாக சரிவடைந்து வருகிறது. அணையின் நீர்பரப்புப் பகுதி 59.25 சதுர மைல் என்ற அள வுக்கு விரிந்துள்ளபோதிலும் இப் போது அணையில் சுமார் 5 மைல் அளவுக்கு மட்டுமே நீர் தேங்கியுள் ளது. கோடை வெயில் சேலம் மாவட்டத்தில் அதிகரித்துவரும் நிலையில், அணையில் தேங்கி யுள்ள நீர் நாளொன்றுக்கு 0.008 டிஎம்சி ஆவியாகும் வாய்ப்பும் உள்ளது.
மேலும், அணையில் 24 அடி உயரத்துக்கு நீர் இருந்தபோதிலும் அதில் 15 அடி உயரத்துக்கு கீழே உள்ள ‘டெட் ஸ்டோரேஜ்’ எனப் படும் 3 டிஎம்சி நீரை எடுத்துப் பயன் படுத்த முடியாது. இதனால், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தால் 11 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகள் ஆகியும், இதுவரை தூர் வாரப்படவில்லை. இதனால் அதிக அளவு சேமிக்க முடிவதில்லை. இதனால் பயன்படுத்த நீரின் அளவு டெட் ஸ்டோரேஜை தாண்டி உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் அணையின் நீர்மட்டமும் குறைவாகவே உள்ளது. இந்த நேரத்தில் அணையை தூர்வாருவது எளிது.
முன்பெல்லாம் அணையை தூர்வார மனித சக்தி அதிகம் தேவைப்படும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நவீன கருவிகள் வந்து விட்டது. சேகரிக்கப்படும் மண் மற்றும் சகதிகளை விவசாய நிலத்திற்கு உரமாக பயன்படுத்த முடியும். அல்லது செங்கல் தயாரிக்க கொடுக்கலாம். இதன் மூலம் குறைந்த விலையில் செங்கற்கள் கிடைக்கும். ஆனால் இதுவரை எந்த அதிகாரியும் தூர் வார நடவடிக்கை எடுக்காதது விவசாயிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.