கோடை வந்தாச்சு.. வெயில் ஜாஸ்தியாகி நம்மள நடமாடும் தண்ணிவண்டியா ஆக்கிவிட்டுருச்சி..
அட இதுகூட பரவாயில்ல. பலபேரு கையில ஃபேன தூக்கிட்டு சுத்திட்டு கெடக்காங்க...
அதவிட பெரிய பிரச்ன தண்ணி தான்.. நீர் பற்றாக்குறை கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா இடங்களிலும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.
சும்மாவே கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறக்கமாட்டேன் என்கிறது. இந்நிலையில் வெயிலை காரணம் காட்டி வறட்சி எனக்கூறி மீண்டும் தண்ணீர் தர மறுக்கும் என்ற சூழ்நிலையில், அவர்கள் ஏன் தண்ணீர் தர வேண்டும். அவர்களுக்கே நாமதான் தண்ணி தருகிறோம்னு ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது..
அதைப் பற்றி ஆராய்ந்து எழுதிய முழுக்கட்டுரை தான் இது.
கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டால்தான் நமக்கு தண்ணீர் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவுக்கே நாம்தான் தண்ணீர் தருகிறோம் என்ற செய்தி புதிதுதான் இல்லையா?
Balajiviswanathan
மோயாறு... பொதுவாக யாரும் கேள்விப் படாத ஆறு இது.. தமிழகத்துக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் உருவாகி கர்நாடகாவுக்குள் பாயும் ஆறு தான் மேயாறு.
D momaya
பவானி ஆற்றின் துணை ஆறாக இது விளங்குகிறது. அதிலும் மற்ற ஆறுகளைவிட இது மிகப்பெரியது ஆகும்.
பவானி ஆற்றின் துணை ஆறாக இது விளங்குகிறது. அதிலும் மற்ற ஆறுகளைவிட இது மிகப்பெரியது ஆகும்.
Magentic Manifestations
மேற்கு தொடர்ச்சி மலையின் முக்குருத்தி பகுதியில் பிறக்கும் மோயாறு அங்கிருந்து ஓர் அணையில் சென்று தங்குகிறது. அதுதான் பைக்காரா.
KARTY JazZ
இந்த அணையிலிருந்து நீர் கூடலூர் வழியாக கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் தேசிய பூங்கா, முதுமலை பூங்கா, சத்தியமங்கலம் பகுதிகளை உள்ளடக்கிய தொங்குமரஹெடா பள்ளத்தாக்கு வழியாக தனது பயணத்தைத் தொடர்கிறது.
Marcus334
தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்ட நாட்கள் தீர்க்கப்படாமல் உள்ள ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் பிரச்சனைதான். இந்த காவிரி விஷயத்தை வைத்துதான் இரு மாநில அரசியல்வாதிகளுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
Jagadish Katkar
நாம் இன்று வரை கர்நாடகாவிடம் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறோம். அவர்களும் கெத்தாக முடியவே முடியாது என்று மார்தட்டி கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்நாடகாவுக்கே நாம்தான் தண்ணீர் தந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?
ஆம் ஊட்டியில் உள்ள மோயர் ஆற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிலும் பாய்கிறது.கர்நாடகாவில் பாயும் தண்ணீர் கபினி அணையிலும், நூகு அணையிலும் கலக்கிறது.
Kiranmadhu.e
பின்னர் இரண்டும் இணைந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்குள் பாய்கிறது. ஆனால் நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்து கொண்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.