April 17, 2017
அரியலூரில் கர்ப்பிணிப் பெண் ஆணவக் கொலை! : பெண்ணின் பெற்றோர் கைது!
அரியலூர் அருகே காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்ப்பிணியை பெற்றோர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியை ஷர்மிளா அதேபகுதியை சேர்ந்த கலைராஜன் என்பவரை காதலித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 2008ம் ஆண்டு கலைராஜனுடன் வீட்டைவிட்டு சென்றுள்ளார்.
ஷர்மிளாவை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்த பெற்றோர் அன்புமணி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அன்புமணியிடம் வாழபிடிக்காத ஷர்மிளா மீண்டும் கலைராஜனுடன் சென்னைக்கு சென்று திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், 7 மாத கர்ப்பிணியான ஷர்மிளாவை தேடி வந்த உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்று கருவை கலைக்க கூறியுள்ளனர். கருவை கலைக்க ஷர்மிளா மறுத்ததால் அடித்து கொலை செய்துவிட்டு தூக்குமாட்டி தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கொல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் தாய் மற்றும் தந்தையை கைது செய்து பொன்பரப்பி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரியலூரில் கர்ப்பிணிப் பெண் ஆணவக் கொலை! : பெண்ணின் பெற்றோர் கைது!
Reviewed by மறத்தமிழன்
on
April 17, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.