April 25, 2017
அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் சார்பில் 2017-2018ஆம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
இதற்கான விழாவில் துணைவேந்தர் செ.மணியன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கி விற்பனையை தொடக்கிவைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2015-16ஆம் ஆண்டு 98,919 மாணவர்கள் அனுமதி சேர்க்கை செய்யப்பட்டனர்.
2016-17ஆம் ஆண்டில் அனுமதி சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆயிரத்து 729ஆக உயர்ந்தது.
மொத்தம் 259 படிப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் 42 படிப்பு மையங்களும், வெளி மாநிலங்களில் 17 படிப்பு மையங்களும் இயங்குகின்றன. வருகிற கல்வியாண்டில் எம்எஸ்சி இயந்திர மதிப்பியல், பிஏ கம்யூனிகேட்டிவ் என்ஜினீயரிங் உள்ளிட்ட 10 புதிய படிப்புகள் தொடங்கப்படும்.
தற்போது பல்கலைக்கழக அச்சகம் நவீனப்படுத்தப்பட்டு, அனைத்துப் புத்தகங்களும் அனுமதி சேர்க்கையின் போதே மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 3300 கல்வி நிறுவனங்களில் தேசிய தர நிர்ணய நிறுவனம் ஆய்வு செய்து தேர்ந்தெடுத்த 100 கல்வி நிறுவனங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 92-வது இடத்தில் உள்ளது. பல்கலைக்கழகங்கள் அளவில் 56-வது இடத்தை பெற்றுள்ளது. இதற்கான விருதை அண்மையில் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் பயில விரும்புகிற மாணவர்கள், பல்கலைக்கழக அனைத்து படிப்பு மையங்களிலும் திங்கள்கிழமை முதல் விண்ணப்பங்களை பெற்று சேர்ந்து பயனடைய வேண்டுகிறேன் என்று துணைவேந்தர் எஸ்.மணியன் தெரிவித்தார்.
விழாவில் பதிவாளர் கே.ஆறுமுகம், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.எம்.சந்திரசேகரன், முன்னாள் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் கே.கதிரேசன், கல்வி வளர்ச்சி இயக்குநர் கே.மணிவண்ணன், புல முதல்வர்கள் சி.ஆண்டனி ஜெயசேகர் (பொறியியல்), எம்.ரவிச்சந்திரன் (விவசாயம்), மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் முனியப்பன், மக்கள்-தொடர்பு அலுவலக மேலாளர் காளிதாஸ் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். முன்னதாக, தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநர் எம்.அருள் வரவேற்றார்.
தொலைதூர கல்வி சேர்க்கை தொடர்பான மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள்: 04144-238043 ற்ர் 238047, 238610.
இணையதளம்: www.annamalaiuniversity.ac.in or www.audde.in, மின்னஞ்சல்: ddedirector2013@gmail.com.
அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
Reviewed by மறத்தமிழன்
on
April 25, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 25, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.