Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 30, 2017

முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள் - அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஓபன் சேலஞ்ச்!


இந்தியாவில் தேர்தலில் தோல்வியடையும் கட்சிகள் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு முறையை குறைகூறி வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்திருக்கிறார். இதுவரை 16 முக்கிய கட்சிகள் மின்னனு வாக்குப்பதிவு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வாக்கு சீட்டு முறையே பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் மக்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்து தவறான புரிதல் ஏற்படுகிறது.
எனவே வெகு விரைவில் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளோம். அங்கே நேரடியாக நிரூபித்து காட்ட அரசியல் கட்சிகளுக்கு ஓபன் சேலஞ்ச் தரப்படும் என்றும் நசீம் தெரிவித்திருக்கிறார். மேலும், இனி வரும் எல்லா தேர்தல்களிலும் வாக்குப்பதிவு ரசீது சீட்டு வழங்கப்படும். இதன் மூலம் யாருக்கு ஒட்டு போட்டோம் என்பதை மக்களே தெரிந்துகொள்ள முடியும். அடுத்தாண்டு செப்டம்பருக்குள் 15 லட்சம் வாக்குப்பதிவு ரசீது சீட்டு இயந்திரம் ரெடியாகிவிடும். 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுமைக்கும் வாக்குப்பதிவு ரசீது சீட்டு இயந்திரம் பயன்படுத்தபடும் முதல் நாடாக இந்தியா விளங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.