April 30, 2017
துவங்கியது போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகத்தில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று துவங்கியது.
இளம்பிள்ளை வாதம் எனும் போலியோவை ஒழிப்பதற்காக, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் இரண்டு தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு முதற்கட்ட முகாம் கடந்த 2-ம் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, மாநிலம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
43,051 சொட்டுமருந்து மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை, இந்த மையங்கள் செயல்படும்.
'தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாள்களுக்கு முன் சொட்டுமருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாள்களில் மீண்டும் சொட்டுமருந்து கொடுக்க வேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாள்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்' என தமிழக அரசு கூறியுள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திருவள்ளூரில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவங்கி வைத்தார். பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "போலியோ சொட்டுமருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால், தமிழகம் தொடர்ந்து 13-வது வருடமாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. மொத்தம் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிட்டுள்ளோம். போலியோவை ஒழிக்க முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
துவங்கியது போலியோ சொட்டு மருந்து முகாம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 30, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.