Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2017

உன்னை பற்றிய பல உண்மைகளை வெளியிட வேண்டி வரும் : நிர்மலா பெரியசாமியை வெளுத்து வாங்கிய நடிகர்.,


அ.தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளர் குண்டு கல்யாணம்,தன்னை குண்டு என்று விமர்சித்த நிர்மலா பெரியசாமியை சரமாரியாக தாக்கி பேசியுள்ளார்.
அ.தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளரான நிர்மலா பெரியசாமி சமீபத்தில்தான் பன்னீர் அணியில் இணைந்தார்.தினகரன் பிரிவில் இருந்த வளர்மதி,சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரின் மாறுபட்ட பேச்சு காரணமாக அங்கிருந்து விலகியதாக தெரிவித்தார்.
மேலும்,இவர் நட்சத்திர பேச்சாளர் குண்டு கல்யாணையும் குண்டு நடிகர் என்று விமர்சித்துள்ளார்.இதற்க்கு தக்க பதிலடி கொடுத்த குண்டு கல்யாண், என்னை குண்டு என்று சொல்வதற்கு இவர் யார்? அவங்க அப்பா அம்மா சம்பாத்தியத்தில் சாப்பிட்டுதான் நான் குண்டாக இருக்கிறேனா.
2014 ஆம் ஆண்டில் அரசியலுக்கு வந்த நீ, அரசியல் பற்றி பேசுகிறாயா? எம்பி சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக நீ ரோட்டில் நின்றதெல்லாம் நினைவில்லையா.
40 ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் வளர்மதி அக்காவை பற்றி விமர்சிக்கிறாயே, உன்னை பற்றி எங்களுக்கு எல்லாம் தெரியும். அதிகமாக பேசினாய் என்றால் உன்னை பற்றிய அனைத்து உண்மைகளையும் தொகுப்பாக வெளியிட வேண்டிவரும்.
போதும், இதோடு நிறுத்திக்கொள். பிரசாரத்தின் போது என்ன பேசுவது என்றுகூட தெரியாமல், அண்ணா கொஞ்சம் சொல்லிதாருங்கள் என்று எங்களிடம் கேட்ட நீ, அரசியல் பற்றி பேசுகிறாயா என தாக்கி பேசியுள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.