April 18, 2017
களமிறங்கிய ‘சைவ பீர்’! அலறும் கோக், பெப்சி நிறுவனம்! தமிழக குளிர்பான நிறுவனங்கள் அதிரடி! தமிழன்டா!
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சியின் போது வெளிநாட்டு குளிர்பானங்களான கோக், பெப்சி நிறுவனங்களுக்கு எதிராக மாணவர்களும், இளைஞர்களும் குரல் கொடுத்தனர்.
இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த மார்ச் 1 முதல் வெளிநாட்டு குளிர்பானங்களான கோக், பெப்சி போன்றவற்றை விற்பனை செய்வதில்லை என தமிழக வியாபாரிகள் சங்கங்கள் முடிவெடுத்து அதனை செயல்படுத்தவும் செய்தது.
இதனால் இயற்கை பானங்களான இளநீர், மோர், கரும்புச்சாறு, பதநீர் போன்றவற்றின் மீது மக்கள் பார்வை திரும்பியது. தற்போது வெயில் காலம் என்பதால் மக்கள் இயற்கை குளிர்பானங்களை உட்கொள்வர். ஆனால் மதுப்பிரியர்கள் பீர் உட்கொள்வர்.
தற்போதைய சூழ்நிலையில் மதுக்கடைகள் அகற்றப்பட்டு வருவதால் குடிமகன்கள் திண்டாடி வருகின்றனர். அவர்களின் திண்டாட்டத்தை போக்கவும், மதுப்பழக்கத்தை மாற்றவும் புதிய வரவாக ‘‘சைவ பீர்’’ குளிர்பானம் விற்பனைக்கு வந்துள்ளது.
இதை பார்த்த பலரும் முதலில் ‘பீர்’ என்றே ஒதுக்கினர். பின்னர் இது முற்றிலும் பழச்சாறு என விளக்கம் அளித்த பிறகு பலரும் விரும்பி பருகி
வருகின்றனர். வெளிநாட்டு குளிர்பானங்களுக்குப் போட்டியாக, வாடிக்கையாளர்களைக் கவர, உள்ளூர் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள், பல்வேறு யுக்திகளை கையாள்கின்றன.
இதன்படி, ‘பீர்’ போன்றே, 750 மி.லி., பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பாட்டில் ஒன்று, 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. பல்வேறு சுவைகளுடன், 5,000, 7,000 மற்றும் 10,000 என ‘ஒரிஜினல் பீர்’ போல, பெயரிட்டு விற்பனைக்கு வந்துள்ளன.
இவற்றை, பொதுமக்கள் விரும்பி வாங்கி அருந்துவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
களமிறங்கிய ‘சைவ பீர்’! அலறும் கோக், பெப்சி நிறுவனம்! தமிழக குளிர்பான நிறுவனங்கள் அதிரடி! தமிழன்டா!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 18, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.