Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 30, 2017

கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை சம்பளம் எவ்வளவு தெரியுமா? அம்மாடியோவ்


கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை.
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை இருக்கிறார். இவரது கடந்த ஆண்டு (2016) சம்பளம் ரூ.1,285 கோடி (20 கோடி டாலர்) என தெரியவந்திருக்கிறது. முந்தைய 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சம்பளம் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு சம்பளம் 6,52,500 டாலர்கள். 2016-ம் ஆண்டு சம்பளம் 6,50,000 டாலர்கள். சம்பளம் குறைவாக இருந்தாலும் ஒதுக்கப்பட்ட பங்குகள் இரு மடங்காக உயர்ந்திருக்கின்றன. 2015-ம் ஆண்டு 9.98 கோடி டாலர் அளவுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டன. 2016-ம் ஆண்டு 19.87 கோடி டாலர் அளவுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டன. பல வெற்றிகரமான திட்டங்களை அறிவித்ததால் ஊதிய நியமன குழு அதிக சம்பளம் வழங்கி இருப்பதாக சிஎன்என் தெரிவித்திருக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மற்றும் நிறுவனர் லாரி பேஜ், புதிதாக உருவாக்கப்பட்ட ஆல்பபெட் நிறுவனத்தை கவனிக்க சென்றுவிட்டதால் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர்பிச்சை நியமனம் செய்யப்பட்டார்.

2016-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன், ஹெட்செட், ரூட்டர் உள்ளிட்ட சில சாதனங்களை அறிமுகம் செய்தது. இவற்றுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் இதர பிரிவு வருமானமும் (ஹார்ட்வேர் மற்றும் கிளவுட்) 310 கோடி டாலரை தொட்டிருக்கிறது. ஆல்பபெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 60,000 கோடி டாலரை முதல் முறையாக தொட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.