Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 14, 2017

ச்சீ கழுதைனு யாரையும் சொல்லாதீங்க..! உலக அளவில் மவுசு கூடுது, பணம் கோடி, கோடியாக கொட்டி கொடுக்குது.


பொதுவாக ஒருவரை திட்டும்போது கழுதை என்ற வார்த்தையை  பயன்படுத்துவோம், முன்பு ஒரு காலத்தில் லோடு ஆட்டோ போல பயன்படுத்தப்பட்டதுதான் கழுதை.
இந்த நாகரீக காலத்தில், அதுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. பொதி சுமக்க நாம் இப்போது கழுதையைப் பயன்படுத்துவது இல்லை.
குடும்பத்தில் சம்பாதித்து, குடும்ப பாரத்தை சுமப்பவர்கள், நான் கழுதையாக கஷ்டப்படுகிறேன் என்பார்கள், கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பார்கள், அமைதியாக இருந்தால் ஏண்டா கழுதைப்போல நிற்கிறாய் என்பார்கள்.
 நமது நாட்டில் இவ்வாறுதான் கழுதையை  பிறரை திட்படுவதற்கு பயன்படுத்துகிறோம். என்னைப்பார் யோகம் வரும் என்று கண்திருஷ்டிக்கு பயன்படுத்துகிறோம்.
கழுதையை வளர்த்து வந்தவாகள் தற்போது கழுதைப்பால் விற்பனை செய்து வருகின்றனர். கழுதைப்பால் கிடைப்பது அரிது.
இந்த பால் மூச்சு திணறலை குணப்படுத்தும், குழந்தைகளுக்கு கொடுத்தால் ஜீரணசக்தியை அதிகரிக்கும், மஞ்சள் காமாலை, சளி போன்றவைகளுக்கு இது அருமருந்தாகவும் பயன்படுகிறது.
கடலூர் சித்தமருத்துவர் சிராஜீதீன் கூறுகையில் கழுதை பால் குழந்தைகளுக்கு மிக அருமையான ஒன்று, தாய்ப்பாலுக்கு அடுத்து குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடியபால் கழுதைப்பால்தான் என்கிறார்.
நாம் கழுதை வளர்ப்பதை தவிர்த்து வருகிறோம். சீனா மற்றும் உலக அளவில் கருவளையம் நீக்கும் மருந்து தயாரிக்க கழுதைத் தோல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கழுதை ரூ 20 ஆயிரம், முதல் 30 ஆயிரம் வரை விலைபோகுது.
இந்த உண்மையை அறிந்து கொண்ட பாகிஸ்தான் அரசு கழுதை வளர்ப்பதற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கழுதையை வளர்த்து வருகிறது. அதனை சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறது.
தமிழகத்தில் கழுதைப்பால் மூலம் ஒரு கழுதையிடம் இருந்து பால் விற்பனை செய்வதால் ரூ 500 தினமும் சம்பாதிக்கின்றனர்.
எனவே இனி ஒன்றுக்கும் உதவாதவர்களை கழுதை என்று திட்டாதீர்கள், கழுதை வளர்ப்பு, உலக அளவில் அதிகரித்து வருகிறது. அது கோடி, கோடியாக பணத்தை கொட்டிக் கொடுக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.