April 18, 2017
சுயநல அரசியல்வாதிகளின் ‘சூப்பர் நாடகம்’! அப்பாவியாய் வேடிக்கை பார்க்கும் மக்கள்! விடிவு பிறக்குமா?
தற்போதைய சூழ்நிலையில் தமிழக அரசியலில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. ஆட்சிகள் மாறும் காட்சிகள் மாறாது என்பது போல சமீபகாலமாக தமிழக அரசியலில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜெ., மறைவிற்கு பிறகு கடந்த 5 மாதங்களாக தமிழக அரசியலில் பெரும் புயலே வீசி கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரத்திற்காக அலையும் கூட்டம் ஒருபுறம், பதவிக்காக பதுங்கும் கூட்டம் ஒருபுறம் என ஆடுபுலி ஆட்டம் ஆடி கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இப்போது பிரிந்தவர்கள் ஒன்று சேர்கிறார்கள். வார்த்தைகளால் மோதி கொண்டவர்கள் உடன்பிறப்பே என அகமகிழ்கிறார்கள். ஒருத்தரை ஒருத்தர் ஊடகங்களில் தரம் தாழ்ந்து விமர்சித்தவர்கள் நாங்கள் உடன்பிறப்புகள், கழகம் எங்கள் வீடு என வாய்கிழிய பரப்புரை ஆற்றுகிறார்கள்.
தங்கள் சுயநலங்களை பற்றி மட்டுமே சிந்திக்கும் அரசியல்வாதிகள், பொதுமக்களின் படும் துயரங்களை களைவதற்கு முன்வருவதில்லை. தற்போது தமிழகம் துடுப்பில்லாத படகை போல தத்தளித்து கொண்டிருக்கிறது.
எங்கு திரும்பினாலும் போராட்டம், ஆர்ப்பாட்டம் மக்கள் தங்கள் தேவைகளுக்காக ரோட்டில் இறங்கி போராடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
மற்ற மாநிலங்கள் வளர்ச்சி நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகம் எதை நோக்கி பயணிக்கிறது என்று யாருக்கும் தெரியவும் இல்லை, தெரிந்து கொள்ளவும் தயாரில்லை. இதுதான் தமிழகத்தின் இன்றைய நிலைமை.
இந்நிலையில் பிளவுப்பட்ட கட்சியை இணைப்பது எங்களுக்காக அல்ல, மக்களின் நலனுக்காக என்று மாண்புமிகுக்கள் மார்தட்டி கொள்கிறார்கள். தங்கள் சுயநலத்திற்காக இணைவதும், பிரிவதுமாக இவர்கள் போடும் நாடகத்தை அப்பாவியாய் பார்த்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
சுயநல அரசியல்வாதிகளின் ‘சூப்பர் நாடகம்’! அப்பாவியாய் வேடிக்கை பார்க்கும் மக்கள்! விடிவு பிறக்குமா?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 18, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.