April 14, 2017
மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அதிரடி ! மோடிக்கு ரத்தம் அனுப்புவோம் !!
தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்குத் தீர்வு காணக் கோரி பிரதமர் மோடிக்கு ரத்ததானம் செய்து ரத்த பாட்டிலை அனுப்பப் போவதாக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லபாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராடிக் கொண்டுள்ளனர். அதற்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.
எனவே பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடி தீர்வு காண வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, நாங்கள் ரத்ததானம் செய்து பாட்டிலை அனுப்பப் போகிறோம். தலைமைத் தபால் அலுவலகத்திலிருந்து ஏப்ரல் 19ம் தேதி புதன்கிழமை இந்தப் போராட்டம் நடத்தப்படும்.
டெல்லி போராட்டத்திற்கு உடனடியாக தீர்வு கண்டிட வேண்டி இந்த அறவழி நிகழ்ச்சியை தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் நடத்துகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அதிரடி ! மோடிக்கு ரத்தம் அனுப்புவோம் !!
Reviewed by Admin
on
April 14, 2017
Rating: 5
Reviewed by Admin
on
April 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.