Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 29, 2017

கமாண்டோ படையினர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து! வைரலாகப் பரவும் வீடியோ!


மத்திய ரிசர்வ் படையின் கமாண்டோக்கள் பயணித்த ஹெலிகாப்டர், சுக்மா மாவட்டம் அருகே மூன்று நாள்களுக்கு முன்னர் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்தபோது எடுக்கப்பட்ட நேரடி வீடியோ காட்சி, தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

மூன்று நாள்களுக்கு முன்னர், சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படையினர் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தியபோது, மீட்புப் பணிக்குச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், சிறப்பு 'கோப்ரா' கமாண்டோ படையினர் ஐந்து பேர் பயணித்தனர். ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது, தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வீரர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.

இந்த நிலையில், மூன்று நாள்களுக்கு முன்னர் நடந்த இந்த விபத்தின் நேரடிக் காட்சி, வீடியோவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
இந்த விபத்து, தொழில்நுட்பக் கோளாறால்தான் ஏற்பட்டதா அல்லது தீவிரவாதத் தாக்குதல் முயற்சியா என்ற கோணங்களில் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.