Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 27, 2017

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்க கூடாது: பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை


பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்.
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்க கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச அளவில் தரம்வாய்ந்த உருக்கு பொருட்களை உருவாக்குவதில் பிரசித்தி பெற்ற நிறுவனமாக சேலம் உருக்காலை திகழ்ந்து வருகிறது. இதனை தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக ஊடக செய்திகளின் வாயிலாக அறிய வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள இந்த நிறுவனத்தின் விரிவாகத்திற்காக தமிழக அரசு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருவதாகவும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எந்த பொது துறை நிறுவனமும் முறையான உதவியையும் ஊக்கமும் தந்தால் நல்ல லாபத்துடன் செயல்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சேலம் உருக்காலையின் நஷ்டத்தை எப்படி சரி செய்வது என்பதை ஆய்வு செய்து, தனியார்மயமாக்க வேண்டும் என்ற முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக பிரதமருக்கு எழுதியுள்ள கடித த்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.