April 20, 2017
கொலை செய்துவிட்டு பொலிசாருக்கு சவால் விட்ட கொலையாளி!
அமெரிக்காவில் முதியவர் ஒருவரை கொலை செய்துவிட்டு பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட கொலையாளி குறித்து தகவல் அளிக்கும் நபருக்கு ரூ.75 லட்சம் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு பொலிசார் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட் நகர் பொலிசார் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதே நகரை சேர்ந்த ஸ்டீவ் ஸ்டீபென்ஸ்(37) என்ற நபர் கடந்த 16-ம் திகதி சாலையில் நடந்துச் சென்றுள்ளார்.
அப்போது, எதிரில் வந்த 74 வயதான முதியவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதுமட்டுமில்லாமல், கொலைக்கு பின்னர் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை கொலையாளி வெளியிட்டுள்ளார்.
அதில், குறிப்பிட்ட முதியவரை தான் கொலை செய்துள்ளதாகவும், இன்னும் 13 பேரை கொல்ல வேண்டும் எனவும், பொலிசாரால் தன்னை பிடிக்க முடியாது’ என சவால் விடுத்துள்ளார்.
பேஸ்புக்கில் வெளியான இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வீடியோ உடனடியாக நீக்கப்பட்டது.
இத்தகவல்களை உறுதி செய்துள்ள பொலிசார் கொலையாளியை கைது செய்ய பொலிஸ் படையை முடக்கி விட்டுள்ளனர்.
இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலில், கொலையாளி மிகவும் ஆபத்தானவராக தெரிகிறார். நிச்சயம் அவரிடம் ஆயுதம் இருக்கும் என எண்ணிகிறோம்.
கொலையாளியை பிடிக்க நாடு முழுவதும் கைது வாரண்ட் கொடுத்துள்ளோம். மேலும், கொலையாளி பற்றியும் அவரது இருப்பிடம் பற்றியும் தகவல் அளிக்கும் நபருக்கு 50,000 டொலர்(76,09,500 இலங்கை ரூபாய்) பரிசு வழங்கப்படும் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொலை செய்துவிட்டு பொலிசாருக்கு சவால் விட்ட கொலையாளி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 20, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.