Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 1, 2017

விமானத்தில் பயணிக்க முடியாமல் தவிக்கும் "செருப்படி" எம்.பி.!


விமான நிறுவன மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனை எம்.பிக்கு விமான நிறுவனங்கள் விமானத்தில் ஏற தடை விதித்துள்ளன.
இதன் காரணமாக அவர் வெவ்வேறு வழிகளில், விமான டிக்கெட் பெற முயன்று வரும் தகவல் வெளியாகியுள்ளது.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தபோது இருக்கை விஷயமாக தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை சமாதானப்படுத்த வந்த விமான நிலைய மேலாளருக்கும் கெய்க்வாட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து தனது செருப்பால் விமான நிலைய மேலாளரை அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து அவருக்கு எந்தவொரு விமான நிறுவனத்திலும் பயணம் செய்ய டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றும் உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக தொடர்ந்து டிக்கெட் பெற, வெவ்வேறு வழிகளில் முயன்று வருகிறார்.

கடந்த வாரம் மும்பையில் இருந்து, டில்லி செல்ல விமான டிக்கெட் பெற முயற்சி செய்துள்ளார். ஆனாலும் அவரது பெயரை கேட்டதும் விமான நிறுவன ஊழியர்கள், 'டிக்கெட் வழங்க முடியாது' என தெரிவித்து விட்டனர்.

அதைத்தொடர்ந்து ஐதராபாத்தில் இருந்து டில்லி செல்ல பேராசிரியர் கெய்க்வாட் என்ற பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சித்துள்ளார். அதையும் ஏர் இந்தியா ஊழியர்கள் கண்டுபிடித்து டிக்கெட் கொடுப்பதை தவிர்த்து விட்டனர்.

பின்னர் நாக்பூரில் இருந்து டில்லி செல்ல டிராவல்ஸ் ஏஜன்டுகள் மூலம் முன்பதிவு செய்துள்ளார்; அப்போதும், 'ரவீந்திர கெய்க்வாட் என்ற பெயருக்கு டிக்கெட் கிடையாது என்று விமான நிறுவனங்கள் தெரிவிப்பதாக ஏஜன்டுகள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த 7 நாட்களில் மட்டும் 6 முறை விமான டிக்கெட்டுக்கு முயற்சித்தும் அவருக்கு டிக்கெட் கிடைத்தபாடில்லை. இதன் காரணமாக செய்வதறியாது திகைத்து வருகிறார் கெய்க்வாட்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.