April 5, 2017
ஆண்டவா மோடிக்கு நல்ல புத்தி கொடுப்பா.. கை, கால்களை கட்டிக் கொண்டு விவசாயிகள் போராட்டம்!
கடந்த 23 நாள்களாக போராடி வரும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும், காது கொடுத்து கேட்கவும் மோடிக்கு இறைவன் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கை, கால்களை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட
ஆண்டவனே பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கை, கால்களைக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி நதி நீர் மேலாண்மை அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 23 நாள்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தியும் அவர்களது கோரிக்கைகள் இன்னும் நிறைவேறவில்லை. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
தொடரும் போராட்டம்
இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்தால் மட்டும் போதாது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
தலைகீழாக நின்று போராட்டம்
இந்நிலையில் நேற்று விவசாயிகள் போராட்டக் குழுவைச் சேர்ந்த சிலர் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்துக்கு மாணவர்கள், இளைஞர்கள் என ஆதரவு அளித்து வருகின்றனர்.
23வது நாளாக
விவசாயிகளின் போராட்டம் 23-ஆவது நாளை இன்று எட்டியது. இந்நிலையில், பிரதமர் மோடி மௌனத்தை களைய வேண்டும் என்பதற்காக வெட்ட வெயிலில் கை, கால்களை கட்டிக் கொண்டு சாலையில் உருண்டு புரண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நல்ல புத்தி கொடுப்பா
அப்போது விவசாயிகள் கூறுகையில், கடந்த 23 நாள்களாக போராடி வரும் எங்களை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எனவே போராடியே எங்கள் உயிர் போவதற்கு முன்னர் மோடிக்கு நல்ல புத்தியை ஆண்டவன் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
ஆண்டவா மோடிக்கு நல்ல புத்தி கொடுப்பா.. கை, கால்களை கட்டிக் கொண்டு விவசாயிகள் போராட்டம்!
Reviewed by மறத்தமிழன்
on
April 05, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.