பிரட்டனில் சமீபக் காலமாக ஒரு அதிர்ச்சிகரமான நடைமுறை அதிகம் காட்டுதீ போல பரவி வருகிறது. சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள், வீடு இல்லாத ஆண், பெண்களுக்கு வாடகைக்கு விடும் போது, பணத்திற்கு பதிலாக, தங்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள அழைப்பதாக பரவலாக மக்கள் கூறுகின்றனர்.
தங்கள் மோசமான சூழல் மற்றும் வீடு இல்லாத பரிதாப நிலையின் காரணமாக, வசிக்க வீடு இல்லாத ஆண்களும் பெண்களும் உரிமையாளரின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்து அவர்களுடன் உறவு வைத்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.
லண்டன், ரோசெஸ்டர், பிரைட்டன் உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் இந்த சூழல் அதிகமாக அரங்கேறி வருகிறது என ஒரு ஆய்வறிக்கை தகவல் கூறுகிறது.
இதுகுறித்து அந்த ஆய்வறிக்கையில் மேலும், சில தகவல்கள் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் வீடு இல்லாத நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இதில் 25% பேர் வாடகை கட்டணத்திற்கு பதிலாக வீட்டு உரிமையாளருடன் உறவு வைத்துக் கொள்வது உண்மை தான் என பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.
14% பேர் வீட்டு உரிமையாளருடன் இதுபோன்ற ஒப்பந்தத்தின் பேரில் உறவில் இணைவதில் விருப்பம் உள்ளது என அதிர்ச்சி அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில், இது போன்ற ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கு தடை ஏதும் இல்லை, சட்டப்பூர்வமாகவும் தடைகள் இல்லை எனவும். இதனால் பல பெண்கள் துன்பத்திற்கு ஆளாகின்றனர் என்றும் பெண்கள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து, பீட்டர் கைல் என்பவர், இது போன்ற சம்பவங்களுக்கு எதிராக அரவு சட்டம் அறிவிக்க வேண்டும் என்றும். இது பெண்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலான விஷயம் என்றும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.