Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 18, 2017

தெரியுமா... 'இன்று எந்தச் செய்தியும் இல்லை' என்று செய்தி வாசித்த நாள் இன்று!


கடந்த பிப்ரவரி மாதத்தை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்கள். நிமிடத்துக்கு நிமிடம் பிரேக்கிங் நியூஸ், ஒன்றுக்கொன்று சளைக்காத பரபரக்கும் செய்திகள் என எந்நேரமும் சென்சேஷன் மோடிலேயே இருந்தோமே நினைவிருக்கிறதா?. அக்டோபர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆகும் போது செய்தியை பார்க்கத் தொடங்கினோம். அன்றிலிருந்து, ஜெயலலிதா மரணம், ஜல்லிக்கட்டு, சசிகலா-ஓ.பி.எஸ் பிரச்னை என இன்றுவரை தொடர்ந்து நியூஸ்மயம் தான். பிப்ரவரி மாதமெல்லாம் இந்தப் பக்கம் சசிகலா பிரஸ்மீட்.. அந்தப் பக்கம் ஓ.பி.எஸ் பிரஸ்மீட். எதைக் காட்டுவது என்று செய்திச் சேனல்களே குழம்பும் அளவுக்கு நியூஸ் குவிந்தது எல்லாம் வேற லெவல். இன்றைக்கும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு புதிய நியூஸ்கள் நமக்கு வந்து கொண்டே இருக்கிறது.
ஏன், இன்றைக்குக் கூட காலையில் 'டி.டி.வி தினகரனை விசாரிக்க டெல்லி போலீஸ் இன்று சென்னை வருகை' என்று ஒரு ப்ரேக்கிங் நியூஸ். சில மணிநேரங்களுக்குப் பிறகு 'டி.டி.வி தினகரனை விசாரிக்க டெல்லி போலீஸ் இன்று சென்னை வரவில்லை' என்றொரு பிரேக்கிங் நியூஸ்! மீடியாக்கள் மட்டுமல்லாது சோசியல் மீடியா, வாட்ஸப் என ஏதோ ஒரு வகையில் நம்மை தொடர்ந்து துரத்திக் கொண்டேதான் இருக்கிறது.
ஒரு நாள் செய்தியே இல்லையென்றால் எப்படி இருக்கும்?
நாம் வழக்கமாகக் கேட்கும் / பார்க்கும் ஒரு பிரதான சேனல் 'இன்று எந்த நியூஸூமே இல்லை' என்று சொன்னால் எப்படி இருக்கும்? 'விளையாடாதீங்க பாஸ் அப்படி ஒரு நாள் சாத்தியமே இல்லை. எங்கேயாவது ஏதாவது நடந்துகிட்டேதான இருக்கும்' என்கிறீர்களா? உண்மையில் அப்படி ஒரு நாள் வந்தது. இப்போது இல்லை.. 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி.
இந்த சம்பவம் நடந்தது லண்டனில். 24 மணி நேர செய்திச்சேனல்கள், இணையதளங்கள் ஏதும் இல்லாத அந்தக் காலத்தில் மக்கள் செய்தியைத் தெரிந்துகொள்ள இரண்டே வழிகள் தான் இருந்தது. ஒன்று தினசரிகள் மற்றொன்று ரேடியோ. பிபிசி ரேடியோ அப்போது லண்டனில் மிகப் பிரபலம். 1930 ஆம் ஆண்டுதான் பிபிசிக்கு முக்கியமான காலகட்டம். காரணம், அதுவரை நியூஸ் ஏஜென்சிகளிடம் இருந்து செய்திகளை வாங்கி வெளியிட்டுக் கொண்டிருந்த பிபிசி, புதிதாக ஒரு நியூஸ்ரூம் செட்டப்பை அமைத்து சொந்தமாக செய்தி வெளியிடத் தொடங்கியிருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் மக்களுக்கு தெரிவிக்க விரும்பும் செய்திகள் அத்தனையும் பிபிசி வழியாக வெளியிட்டது. அரசாங்க அறிவிப்புகளை மட்டுமே வெளியிடாமல் செய்தி சேகரிப்பவர்கள் பலரை வேலைக்கு வைத்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது.
1930, ஏப்ரல் 18 ஆம் தேதி, புனித வெள்ளியன்று பிரிட்டிஷ் அரசாங்கம் பற்றிய நியூஸ் ஒன்றைத் தான் அன்றைய மாலை நேரச் செய்தியில் வாசிப்பதற்காகத் தயார் செய்திருந்தனர். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் எக்காரணம் கொண்டும் அந்த நியூஸ் மக்களை சென்று சேரக் கூடாது என்று நினைத்தது. அதனால் எல்லாப் பத்திரிக்கைகள் மற்றும் செய்தி நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு உடனே அந்தச் செய்தி வெளியிடாமல் தடுக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர். புனித வெள்ளி காரணமாக அன்றைக்கு எல்லா பத்திரிக்கைகளும் விடுமுறையில் இருந்தது. ஈஸ்டர் விடுமுறை முடியும் வரை பத்திரிக்கைகள் வெளிவராது என்பதால், பிபிசிக்கு மட்டும் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள். துரதிஷ்டவசமாக அன்றைக்கு அந்த நியூஸை விட்டால் பிபிசியிடம் வேறு செய்தி இல்லை.
மாலை 6:30 மணி. செய்திக்காக எல்லோரும் பிபிசி ரேடியோவிற்கு காது கொடுத்து காத்திருக்க, செய்தி வாசிப்பவர் குரல் ஒலிக்கத் தொடங்குகிறது. "Good Evening. Today is Good Friday. There is no news" அவ்வளவு தான். அதற்கு பிறகு செய்தி நேரம் முழுவதும் பியானோ இசை மட்டுமே ஒலித்தது. வரலாற்றில் அந்த நாள் இடம்பிடித்தது.
சரி உண்மையில் அந்த நாளில் வேறெந்த சம்பவமும் நடக்கவில்லையா?
வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங் எனும் இடத்தில் புரட்சியாளர்கள் சிலர், பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கை சூறையாடினர். பின்னாட்களில் சிட்டகாங் எழுச்சி என்று வரலாற்றில் இடம்பிடித்த சம்பவம் நிகழ்ந்தது அந்த தினத்தில்தான். ஆனால் அப்போதெல்லாம் Just In, Breaking என உடனுக்குடன் வழங்கும் வழக்கமெல்லாம் இருக்கவில்லை. மேலும் அந்த நிகழ்வை பிபிசி அறிந்திருக்கவில்லை

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.