Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 13, 2017

சென்னை போக்குவரத்தை முற்றிலும் முடக்கிப் போட்ட போராட்டம்! கத்திப்பாராவுக்குப் பூட்டு..


 டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திபாராவில் நடைபெறும போராட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திபாராவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் தமிழக விவசாயிகள் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 31வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை இதுவரை மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில், சென்னை கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டுப்போட்டு மாணவர் அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த திடீர் போராட்டத்தால் கத்திப்பாரா பகுதியில் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. கிண்டி வழியாக சென்னைக்குள் எந்த வாகனமும் போக முடியவில்லை. கிண்டி, விமானநிலையம், வடபழனி சாலைகள் அனைத்தும் முடங்கியுள்னது.

சென்னையிலிருந்து எந்த வாகனமும் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையம் செல்வோர் அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.