Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 15, 2017

மகாதேவன் மரணம்! பரோலில் வருகிறார் சசிகலா?


மகாதேவன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து இறுதி சட்ங்கில் கலந்து கொள்ள சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது?

சசிகலா 2வது அண்ணன் வினோதகனின் மகன் டி.வி. மகாதேவன் இன்று மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு வயது 47, தஞ்சாவூரில் வசித்து வந்த அவர் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கசுவாமி கோயிலுக்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்துள்ளது.

தற்போது அவரது உடல் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவர் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக பதவி வகித்து பின்னர் விடுவிக்கப்பட்டார்.

தற்போது அண்ணன் மகன் உயிரிழந்துள்ளதால், இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  தாய்மாமா மகன் மகாதேவன் உடலுக்கு அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் தஞ்சை செல்கிறார்.


மகாதேவன் மரணம் குறித்து பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகளிடம், பரோலில் செல்வதற்கான நடைமுறைகளை சசிகலா கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அப்போது, சசிகலாவை பரோலில் விடுவது குறித்து சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்யும் என தெரிகிறது.

இது குறித்து பேட்டி அளித்த டிடிவி தினகரன் மகாதேவன் மரணம் குறித்து  சசிகலாவுக்கு தெரிவிக்கபட்டு உள்ளது. சசிகலா விரும்பினால் அவர் பரோலில் வர ஏற்பாடு செய்யப்படும். என கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.