April 16, 2017
எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்கே ஓட்டு விழும் பா.ஜனதா தலைவர் பேச்சால் சர்ச்சை
மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்புள்ளது என்றும், எனவே, ஓட்டுச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. ஆனால், தில்லுமுல்லு செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷன் கூறி வருகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதி செய்யும்வகையில், திரிபுரா மாநில பா.ஜனதா தலைவர் பிபுல் தேவ், அம்மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘அடுத்த ஆண்டு நடக்கும் திரிபுரா சட்டசபை தேர்தலில் மின்னணு எந்திரத்தில் பொத்தானை அழுத்தி யார் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும், அது பா.ஜனதாவுக்குத்தான் விழும்’ என்று மிரட்டல் விடுத்தார்.
அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மாநில தலைவர் ஆஷிஸ் சாகா, ‘பா.ஜனதா தலைவரின் பேச்சு, மாயாவதியின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஓட்டுப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷன் சொல்லும்போது, ஒரு பொறுப்பான கட்சியின் தலைவர் எப்படி இதுபோன்று பேச முடியும்? அவரது பேச்சு, வாக்காளர்களை குழப்புவதுபோல் உள்ளது’ என்று கூறினார். மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்காவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆளும் கூட்டணியான இடதுசாரி கூட்டணி, பிபுல் தேவ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தலைமை தேர்தல் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளது. இதற்கிடையே, ஏராளமானோர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக மாறி வருவதால், எல்லா ஓட்டுகளும் பா.ஜனதாவுக்கே விழும் என்ற அர்த்தத்தில், தான் பேசியதாக பிபுல் தேவ் விளக்கம் அளித்துள்ளார்.
எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்கே ஓட்டு விழும் பா.ஜனதா தலைவர் பேச்சால் சர்ச்சை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.