Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2017

கொடநாடு எஸ்டேட் காவலாளியை கொன்றவன் சிக்கினான்


ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளியை உடனிருந்த மற்றொரு காவலாளியே கொலை செய்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது.
முன்னர் அவர் ஓய்வெடுக்க அடிக்கடி அங்கு செல்வது வழக்கம். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யபட்டார்.
அவருடன் பணியில் இருந்த மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
எஸ்டேட்டில் முக்கிய ஆவணங்களை திருட இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வந்தார்கள்.
இந்நிலையில், ஓம் பகதூரை கொலை செய்தது அவருடன் இருந்த இன்னொரு காவலரான கிருஷ்ண பகதூர் என்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிருஷ்ண பகதூர் கையுறை அணிந்து கொண்டு ஓம் பகதூரை கொலை செய்துள்ளார்.
பின்னர் கையுறையை அவர் எரித்துள்ளார். ஆனால் அது சரியாக எரியாததால் அதை தற்போது ஆய்வு செய்த பொலிசார் அதை கிருஷ்ண பகதூர் கைரேகையுடன் பொருத்தி பார்த்துள்ளார்.
இதையடுத்து அவர் தான் குற்றவாளி என பொலிசார் உறுதி செய்தனர். இதனிடையில் கிருஷ்ண பகதூரை பொலிசார் இன்னும் சற்று நேரத்தில் கைது செய்வார்கள் என தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.