Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 14, 2017

பணம் வாங்கி ஓட்டு போடுவது, வீட்டில் உள்ள பெண்களை கூட்டிகொடுப்பதற்கு சமமாகும்.. நடிகர் மயில்சாமி


தேர்தலின் போது ஓட்டுக்காக பணம் வாங்குவதும், பணம் கொடுப்பதும் வீட்டில் இருக்கும் பெண்களை கூட்டிக்கொடுப்பதற்கு சமமாகும் என நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக நடிகர் மயில்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சிகள் பணத்தை வாரி இறைத்துள்ளனர். அதன் காரணமாகவே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுக்காக கொடுக்கப்படும் பணம் மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம். அவர்கள் மீண்டும் மக்களிடம் கொள்ளை அடிக்கவே பணத்தை தருகிறார்கள்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும், அவரவர் வீட்டில் உள்ள பெண்களை கூட்டிக்கொடுப்பதற்கு சமமாகும் என்று நடிகர் ஜெய்சங்கர் ஒரு படத்தில் கூறியுள்ளார்.
அதைத்தான் நானும் சொல்கிறேன். பணம் வாங்குவது வீட்டுள் உள்ள பெண்களை கூட்டிக்கொடுப்பதற்கு சமம். எதற்காக பணம் கொடுக்கிறீர்கள், எதற்காக பணம் வாங்குறீர்கள் என்று மயில்சாமி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.