April 12, 2017
வாணி ராணி சீரியல் போலவே ராதிகா வீட்டில் ஐடி ரெய்டு நடக்குதேப்பா!
ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ராதிகாவின் கணவரை கைது செய்வார்கள் அதே போல நிஜத்திலும் ரெய்டு நடக்கிறது.
ராதிகாவின் வாணி ராணி சீரியல் சன்டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கறுப்பு பணத்தை காரில் வைத்து கடத்தியதாக வாணியின் கணவரை கைது செய்வார்கள். கதைப்படி வாணி ராதிகாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள். அதே போல இப்போது நிஜமாகவே சரத்குமார் வீட்டிலும், ராதிகாவின் ராடான் மீடியா அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ராதிகாவின் கணவர் சரத்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பாக டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு கொடுத்தார். அவர் அமைச்சர் விஜயபாஸ்கரின் காரில் வந்துதான் ஆதரவு கொடுத்தார். இதில்தான் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது.
பாஜக ஆதரவு நிலையில் இருந்து அதிமுகவிற்கு தாவி, ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஓபிஎஸ்க்கு ஆதரவு கொடுத்தார். ஆர்.கே. நகரில் தனித்துப் போட்டி என்று கூறிய அவர், தனது கட்சி வேட்பாளரின் வேட்புமனுவை செல்லாமல் செய்தார். திடீரென்று டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுத்தார். இதனையடுத்தே சரத்குமார் வீட்டிலும், ராதிகாவின் ராடான் மீடியா நிறுவனத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.
வாணி ராணி
ராதிகா இருவேடத்தில் நடித்துள்ள வாணி ராணி சீரியல் சன்டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் கடந்த வாரமே ரெய்டு காட்சிகள்தான் ஒளிபரப்பானது. வாணியின் கணவர் பூமிநாதன், வில்லனின் மிரட்டலுக்கு பயந்து கறுப்பு பணத்தை கடத்துகிறார். வருமான வரித்துறை அதிகாரிகள் கையில் சிக்கி கைதாகிறார்.
ஐடி ரெய்டு
வாணி பூமிநாதனின் பூமி கிரானைட்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். பெற்ற மகனே தந்தையை கைது செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.
ராதிகா தீர்க்கதரிசியா?
தன்னுடைய வீட்டில் இதே போல ஒரு ரெய்டு சம்பவம் நடக்கப் போவதை முன் கூட்டியே அறிந்துதான் இதே போல தனது சீரியலில் காட்சியமைத்தாரோ வாணி ராணி சீரியல் கிரியேட்டிவ் ஹெட் ராதிகா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொடரும் குடைச்சல்
ராதிகா சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினரின் சோதனையும், விசாரணையும் இன்னமும் முடியவில்லை என்றே தெரிகிறது. சீரியல் டிஆர்பிக்காக வைத்த காட்சிகள் எல்லாம் நிஜத்தில் நடப்பதால் பிரசர் எகிறிப் போய் உள்ளார் ராதிகா.
வாணி ராணி சீரியல் போலவே ராதிகா வீட்டில் ஐடி ரெய்டு நடக்குதேப்பா!
Reviewed by மறத்தமிழன்
on
April 12, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.