Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2017

சசி குடும்பத்தை துரத்திவிட்டு பன்னீருக்கு பதவி! இரட்டை இலையுடன் ஆர்.கே.நகர் தேர்தல் திட்டம்!?


தினகரனை ஒரங்கட்டும் முயற்சியில் கொங்கு மண்டல அமைச்சர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். தம்பிதுரை, வைத்தியலிங்கம், தங்கமணி, வேலுமணி, சண்முகம் ஆகிய அமைச்சர்கள் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.
இரண்டாக பிரிந்துள்ள கட்சியை ஒன்றிணைத்து, பன்னீர்செல்வத்திற்கு பொதுச்செயலாளர் பதவியை கொடுத்து, இரட்டை இலை சின்னத்தை மீட்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
முதல்கட்டமாக தினகரனை அ.தி.மு.க.,அலுவலகத்திற்கு வரவழைத்து பேச முற்பட்டனர். தினகரன் வராததால் அவர் வீட்டிற்கே சென்று கட்சியை விட்டு விலகி இருக்கும்படி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சில கொங்கு அமைச்சர்கள் தினகரனுக்கு மறைமுகமாக சில அழுத்தமும் கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதாவது தற்போது இருக்கும் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் ஆட்சி தொடர வேண்டும் என்பதால்தான் உங்களுடன் இருக்கிறார்கள். நீங்கள் (தினகரன்) கட்சியை ஆட்டிப்படைக்க நினைத்தால் அத்தனை எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களும் உங்களுக்கான ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கிவிடுவார்கள் என்றும் கூறியுள்ளனர்.
இதனால் தினகரனே சற்று மிரட்சியில் இருப்பதாகவே தெரிகிறது.
தினகரன் பரிந்துரையில் பதவி கிடைத்த செங்கேட்டையன், ராதாகிருஷ்ணன் மட்டுமே பன்னீருடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விரைவில் இரண்டாக பிரிந்துள்ள அதிமுக ஒன்றாக இணைந்து சசிகலா குடும்பம் இல்லாத கட்சியாக மாறவுள்ளது. இது அ.தி.மு.க.,வின் உண்மை விசுவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.