Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 10, 2017

போதையில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தை இயக்கவந்த பைலட் சஸ்பென்ட் !


கடந்த சனிக்கிழமையன்று இரவு டெல்லியிலிருந்து அபுதாபி செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை இயக்க வந்த பைலட் மதுபானம் குடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த விமானத்தை இயக்க தடுக்கப்பட்டதுடன் 3 மாதத்திற்கு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

பொதுவாக, எந்த விமானியும் விமானத்தை இயக்க 12 மணிநேரத்திற்கு முன்புவரை மது குடிக்கக்கூடாது. மேலும் விமானத்தை இயக்க செல்லும் போதும் இயக்கிய உடனும் Breather Analyzer (Breathlyser) எனும் கட்டாய 'ஊதும்' (மூச்சு பகுப்பாய்வு) சோதனைக்கு உட்படுத்தப்படுவார். சோதனையில் மாட்டினால் அல்லது சோதனைக்கு மறுத்தால் முதலில் 3 மாதம் சஸ்பென்ட் செய்யப்படுவார், இதேகுற்றத்தை 2 முறை தொடர்ந்தால் 3 ஆண்டுகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவார் என விமான சட்டம் எண்: 24 கூறுகிறது.

சட்டம் தடுத்தாலும் மாதத்திற்கு 1 முதல் 4 விமானிகள் வரை குடித்துவிட்டு மாட்டுவதாகவும், 2015 ஆம் ஆண்டு 49 விமானிகள் தண்டிக்கப்பட்ட நிலையில் 2016 ஆம் ஆண்டு 61 விமானிகள் தண்டிக்கப்பட்டதாகவும், இது 24 சதவிகித தடலடி உயர்வு எனவும் DGCA தெரிவித்துள்ளது.

'சகஜமாக நடைபெறும்' இந்த குடி விதி மீறலில் 2016 ஆம் ஆண்டில் 24 ஏர் இந்தியா விமானிகள் பிடிபட்டு முதலிடம் வகிப்பதாகவும், அடுத்து 9 இன்டிகோ விமானிகளும், 7 ஸ்பைஸ் ஜெட் விமானிகளும் பிடிபட்டுள்ளனர் என இந்திய பாராளுமன்றத்தில் விமானத் துறையின் ராஜாங்க அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் எக்ஸிகியூடிவ் டைரக்டர் ஆப் ஆபரேஷன் பதவி வகித்த கேப்டன் AK கத்பாலியா என்பவர் ஊதும் சோதனைக்கு உடன்பட மறுத்ததால் 3 மாதத்திற்கு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார் எனினும் மீண்டும் அவருக்கு டைரக்டர் (ஆபரேஷன்ஸ்) எனும் பதவியை 5 ஆண்டுகளுக்கு வழங்கி மத்திய அரசு அழகுபார்த்து வருவதை விமானிகள் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Khaleej Times

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.