April 18, 2017
கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன்
இன்று காலை லண்டனில் கைதான விஜய் மல்லையாவிற்கு சில மணி நேரங்களில் நிபந்தனை ஜாமீன் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவான தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விஜய் மல்லையாவை ஸ்காட்லார்ந்து யார்டு போலீஸ் கைது செய்தது. இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான விஜய் மல்லையா, இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களைப் பெற்றார்.
வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவை விட்டு தப்பி ஓடிய விஜய மல்லையாவை இங்கிலாந்தில் தங்கி இந்தியாவை ஏமாற்றி வந்தார். இதனால் வங்கிகள் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இதனையடுத்து, விஜயமல்லையாவை கைது செய்யும் முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன. இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று ஸ்காட்லாந்து போலீசார் விஜயமல்லையாவை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட விஜயமல்லையா. லண்டன் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் இங்கிலாந்து வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன்
Reviewed by மறத்தமிழன்
on
April 18, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.