Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2017

கட்டாந்தரையாக கிடந்த ஏரியை கடல் போல் மாற்றிய இளைஞர்கள்! கிராமத்தினர் பாராட்டு!


ஜல்லிக்கட்டு புரட்சிக்குப் பிறகு தமிழக இளைஞர்களிடையே பல மாற்றங்கள் உருவாகியுள்ளன. ஊர், பொதுமக்கள், பொதுச்சேவைகள் என சமூக நிகழ்வுகளில் இளைஞர்கள் பங்கு பெறுகின்றனர்.
பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சி என்ற கிராமத்தில் 50 ஆண்டுகளாக தூர் வாராமல் விட்டதால் தூர்ந்து போய் சமதளமாய் ஏரி மாறி போயிருந்தது. இதனை நம்மாழ்வார் இளைஞர் நற்பணி மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் கட்டாந்தரையாக இருந்த ஏரியை சீர் செய்து கடல்போல் மாற்றியிருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மாழ்வார் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் தனபால் கூறுகையில், இந்த ஏரி 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 700 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரி தண்ணீரால் சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைத்து கொண்டிருந்தது. தற்போது ஏரி தூர்ந்து போய் கடும் வறட்சி நிலவுகிறது.
மேலும் ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து ஏரியை ஆக்கிரமித்துள்ளது. இதனால் ஏரி இருந்த இடமே தெரியாமல் மாறி போனது. இதனை தொடர்ந்து நாங்கள் ஏரியை சீரமைக்க முடிவு செய்தோம். அதற்காக கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.
கலெக்டரும் எங்களுக்கு சமூக பணிக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் ஏரியை தூர்வாரும் திட்டத்திற்கு ரூ.1 லட்சம் கொடுத்தார். அதன்பின்னர் எங்கள் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து வேலையை தொடங்கினோம். எங்களது முயற்சியை பார்த்து கிராம மக்களும் எங்களுடன் சேர்ந்து ஏரி சீரமைப்பில் ஈடுபட்டனர்.
ஏரியின் மையப்பகுதியில் 7 ஏக்கர் அளவுக்கு ஐந்தடி தூரத்திற்கு ஆழப்படுத்தியுள்ளோம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெய்த மழையால் ஏரியில் தண்ணீர் தேங்கியுள்ளது.
தண்ணீர் இருந்தால் தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயமும், விவசாயிகளும் வளம் பெறுவார்கள். எங்களை போன்று ஒவ்வொரு கிராமத்தில் உள்ள இளைஞர்களும் முயற்சி செய்தால் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.