April 29, 2017
வடகொரியா மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனை தோல்வியில் - பென்டகன்
வடகொரியா மீண்டும் ஆத்திரமூட்டும் செயலாக ஏவுகணை பரிசோதனையில் இறங்கி உள்ளது. சோதனை தோல்வியில் முடிந்தது என பென்டகன் தகவல் தெரிவித்து உள்ளது.
அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா.சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளன.
புதிதாக மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க மந்திரிகள் வலியுறுத்தி வருகின்றனர். வடகொரியாவுக்கு எதிராக கடினமான நிலைப்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்துள்ளார். இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. ஆனால் வடகொரியா கொஞ்சமும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதாக இல்லை. “வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மனோபாவம் தொடர்கிற வரை எங்களது அணு ஆயுத சோதனையும் தொடரும்”
“எங்கள் அணு ஆயுத பலத்தை வலுப்படுத்துவதற்கு, அணு ஆயுத சோதனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று” என்று வடகொரியா கூறியது.
போர் என்ற நிலைபாடு பேச்சுவார்த்தை என்ற நகர்வை நோக்கி திரும்பிய நிலையில் வடகொரியா இன்று மீண்டும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. வடகொரியா ஏவுகணை சோதனையில் மீண்டும் ஈடுபட்டு உள்ளது. ஆனால் சோதனையானது தோல்வியில் முடிந்தது என அமெரிக்காவின் ராணுவ தலைமையகமாக பென்டகன் தெரிவித்து உள்ளது. வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதை அமெரிக்க பசிபிக் கண்காணிப்பு குழு கண்டறிந்து உள்ளது, ஏப்ரல் 28, 10:33 மணியளவில் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி உள்ளது, ஆனால் சோதனையானது வெற்றிப்பெற வில்லை என பென்டகன் குறிப்பிட்டு உள்ளது.
வடகொரியா ஏவிய ஏவுகணையானது வடகொரியா பகுதியை கூட தாண்டவில்லை என தெரியவந்து உள்ளது. வடகொரியா இப்போது பரிசோதனை செய்து உள்ள ஏவுகணையானது அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்கும் நடுத்தர தொலைவை தாக்க கூடியது எனவும் தகவல்கள் தெரிவித்து உள்ளன.
வடகொரியா மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனை தோல்வியில் - பென்டகன்
Reviewed by மறத்தமிழன்
on
April 29, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 29, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.