Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2017

காதலனுக்கு தெரியாமல் கணவனோடு கள்ள உறவு : மனைவியை காதலன் ?


கணவனை பிரிந்து, மாஜி காதலனுடன் குடும்பம் நடத்திய காதலி கர்ப்பம் அடைந்தார்.
சந்தேகமடைந்த காதலியை தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். சத்தியமங்கலத்தை அடுத்த, கடம்பூர் மலைப்பகுதியில், கேர்மாளம் கிராமம் உள்ளது.
இக்கிராமத்தை சேர்ந்த பாப்பாத்தி மகள் பூங்கொடி (26). கோட்டமாளத்தை சேர்ந்தவர் மகாதேவன் (27); பிளஸ் 2 படிக்கும்போது, மகாதேவனை, பூங்கொடி காதலித்தார்.
ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்கு முன், கோபி, கலிங்கியத்தை சேர்ந்த நல்லசாமி, (30), என்பவரை பூங்கொடி திருமணம் செய்தார். கணவனை பிரிந்த பூங்கொடி தனது காதலனுடன் சென்றுவிட்டார்.
எட்டு மாதங்களுக்கு முன், பூங்கொடியை கோட்டமாளத்துக்கு, மகாதேவன் அழைத்துச்சென்றார். இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் பூங்கொடி கர்ப்பம் தரித்தார். கர்ப்பத்துக்கு நான் காரணமல்ல என்று, பூங்கொடியை தினமும் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
பூங்கொடியோ மவுனம் காத்தார். மீண்டும் கணவனோடு சேர்ந்து கர்ப்பம் அடைந்தாரோ என்று மகாதேவனுக்கு சந்தேகம். காரணம் காதலனுக்கு தெரியாமல் கணவன் அவ்வப்போது பூங்கொடியை ரகசியமாக சந்திப்பாராம்.
நேற்று முன்தினம் இரவு, கடம்பூர் பஸ் ஸ்டாண்டில் தாயாருடன் நின்று கொண்டிருந்த பூங்கொடியை, மகாதேவன் மற்றும் அவர் அண்ணன் மாதேஸ், தாக்கியுள்ளனர். தடுத்த அவர் தாயாரையும் அடித்துள்ளனர்.
புகாரின்படி கடம்பூர் போலீசார், இருவரையும் கைது செய்தனர். என்னங்க தலை சுத்துதா? வடிவேல் பட காமெடி மாதிரியே இருக்குதுல்ல ..!
கணவனை சந்திக்கவிடாமல் காதலன் தாக்கிய விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.