Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 20, 2017

மேலும்....மேலும்! - சிறு கதை


மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது பொருத்தமாக இருக்கும் என்றான்.
 மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.
 மன்னரின் மைத்துனர் கொதித்துவிட்டார். ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா? "அதைத் திரும்ப வாங்குங்கள்'' என்றார்.
 "முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல'' என்றார் மன்னர்!
 "சரி..... அவனைக் கூப்பிட்டு இந்த மீன் ஆணா?..., பெண்ணா?..., என்று கேளுங்கள்..... ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும்
என்றும்...., பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன்தான்

வேண்டும்...'' என்றும் கேளுங்கள்.
 எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளைத் திரும்ப வாங்க வேண்டும் என்று நினைத்தார் மைத்துனர்!
 மீனவன் திருப்பி அழைக்கப்பட்டான். கேள்விக்கணையை மைத்துனர் தொடுத்தார்.
 அவன் உஷாராக பதில் சொன்னான். "இது ஆணுமில்லை, பெண்ணுமில்லை.
 இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன்! அதனால்தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன்!'' என்றான்.
 இந்தப் பதிலில் நெகிழ்ந்தார் மன்னர்! மேலும் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்தார்.
மைத்துனருக்கு எரிச்சல் ஏற்பட்டது. மன்னர் கொடுத்த காசிலிருந்து ஒரு காசு தரையிலிருந்து விழுந்து ஓடியது! மீனவன் அதைத் தேடி எடுத்தான்!
 மைத்துனர் கோபத்தின் உச்சிக்கே போனார். "பேராசைக்காரன். கீழே விழுந்த காசை யாவது..... போகட்டுமே.... என்று விட்டானா பாருங்கள்'' என்றார் மன்னரிடம்.
 அவன் நிதானமாகத் திரும்பிச் சொன்னான். "நான் பேராசையில் அதை எடுக்கவில்லை!....
 அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது அதைத் தெரியாமல் மிதித்தால்கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது'' என்றான்.
 இதனால் இன்னும் மனம் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்தார்.
நீதி : சில சமயம் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே செலவுகள் குறையும்!

-ஜோ.ஜெயக்குமார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.