April 16, 2017
கோடிகளில் குளித்த கீதா லட்சுமி..! கொக்கி போட்டு பிடித்த வருமான வரித்துறை.. அம்மாடியோவ்..!!!
கடந்த 7ம் தேதி தமிழகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முதலில் சாதாரணமாக நினைக்கப்பட்ட இந்த சோதனை, விசாரணைக்கு பின் வருமான வரித்துறை அதிகாரிகளையே பெரும் திகைப்பில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக எம்.ஜி.ஆர் பல்கலை துணைவேந்தர் கீதா லட்சுமியின் லீலைகள் அதிகாரிகளை மூர்ச்சையடைய வைத்துள்ளது.
சாதாரண மருத்துவராக இருந்த கீதாலட்சுமி சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இருந்தபோது மாணவர்களிடம் லஞ்சமாக முதலில் வாங்கியது நல்லி சில்க்ஸ், ராஜ்மஹால் ஜவுளிக்கடைகளில் விற்கும் பட்டுப்புடவைகள்தான். மாணவர்களை வைவா, ஹவுஸ் சர்ஜன் போன்ற பிரிவுகளில் பாஸ் போட அப்போதே லஞ்சமாக பட்டுப்புடவைகளை வாங்கிக்கொண்டு இருந்தார்.
பின்பு ஒரு முக்கியமானவரின் அறிமுகம் கிடைத்து அரசியல் வட்டத்தில் அவர் மூலம் நட்பு வளர்த்தவர், அமைச்சர் மூலம் மருத்துவக் கல்வி இயக்குநராகப் பதவியில் வந்து அமர்ந்தவர், ஒரு மருத்துவருக்குப் பணி மாறுதலுக்கு பத்து லட்சம் கமிஷன் வாங்கினார். அவரது காலத்தில் ஆயிரக்கணக்கான மருத்துவப்பணி மாறுதல்கள் போடப்பட்டன. தவிர மருத்துவத்துறையில் நடந்த பல்வேறு பணி நியமனத்தில் எல்லாமே பணம், பணம்தான். இவரிடமிருந்துதான் அமைச்சர் விஜயபாஸ்கருக்குப் பணம் செல்லும்.
இதற்காக மருத்துவர்களின் சங்கத்தைச் சேர்ந்த சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், மதுரைக்கார மருத்துவர் ஒருவர், விழுப்புரம் மருத்துவர் ஒருவர் என மூன்று நபர்கள்தான் அமைச்சருக்கும், கீதாலட்சுமிக்கும் இடைத்தரகர்கள் என்று அந்த மூன்று மருத்துவர்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார்கள். அந்த இடைத்தரகர்களின் சொத்துகளே நூறு கோடிகளைத் தாண்டி இருக்கிறது. அவர்களின் சொத்து விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டவர் மீண்டும் கீதாலட்சுமியின் விஷயத்துக்கு வந்தார் அந்த அதிகாரி.
“கீதாலட்சுமி மருத்துவக்கல்லூரி இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றதும் இனியாவது மருத்துவத்துறை நிம்மதியாக இருக்குமென்று நம்பிய நிம்மதியடைந்த அடுத்த நாளே அவருக்கு, அடுத்த பதவியாக மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி கொடுத்தார்கள். அங்குச் சென்றவர் எம்.எஸ்., எம்.டி. படிக்கும் மாணவர்களுக்கு பாஸ் போட வேண்டுமென்று பிஜி படிக்கும் மாணவர்களிடம் தலை ஒன்றுக்கு சிலரிடம் இருபது லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார். தனியார் மருத்துவக்கல்லூரிகளின் பல்வேறு கோப்புகளில் கையெழுத்துப்போட லட்சக்கணக்கில் லஞ்சம் என வாங்கிக் குவித்துக்கொண்டிருந்த ஒருவரைத்தான் சரியான நேரத்தில் வருமான வரித்துறை சோதனை செய்திருக்கிறது.
விசாரணைக்கு அழைத்தால் வராமல் நீதிமன்றம் சென்று அங்கும் யாருக்காவது பணத்தை கொடுத்து தப்பிக்க பார்க்கிறார். இவர் சம்பாதித்த சொத்துகளை பல்வேறு இடங்களில் நிலம், எஸ்டேட், தங்கம், வெளிநாடுகளில் ஹோட்டல் என முதலீடு செய்துள்ளார். பட்டுச்சேலையில் ஆரம்பித்த அவரது லஞ்சப் பயணம் எங்கும் நிற்காமல் துணைவேந்தர் பதவி வரை வந்திருக்கிறது.
அப்பாவி மக்களின் ரத்தங்களையும், எண்ணற்ற அரசு ஊழியர்களின் வியர்வைகளையும் உறிஞ்சியதால் விஜயபாஸ்கருக்கும், கீதாலட்சுமிக்கும் கடவுள் சரியான நேரத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறார். ஆகையால் இதை வைத்து நீங்கள் புலன் விசாரணை செய்தால் இவர்களுடன் தொடர்புடைய பல்வேறு நபர்கள் சிக்குவார்கள். இந்தக் கடிதத்தை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அனைத்து ஏஜென்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று முடிந்தது அந்தக் கடிதம்” என்று அந்த அதிகாரி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக இதுபோல ரெய்டுகளின்போது அலுவலகத்துக்கு ஏகப்பட்ட கடிதங்கள் வருவதுண்டு. ஆனால் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்துத் தகவல்களையும் பார்த்தபோது ஆடிப்போயிருக்கிறது வருமான வரித்துறை அலுவலகமே. இதை வைத்தே அவரிடம் மூன்று மணி நேரங்களுக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கோடிகளில் குளித்த கீதா லட்சுமி..! கொக்கி போட்டு பிடித்த வருமான வரித்துறை.. அம்மாடியோவ்..!!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.