Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 1, 2017

மாமல்லபுரத்தில் காதலியை சுத்தியலால் அடித்து கொன்ற கொடூர காதலன் தூக்கு போட்டு தற்கொலை


சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த இருதயராஜ். மகள்  ஜெனிபர்புஷ்பா (20) நுங்கம்பாக்கத்தில் மகளிர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இவரும் செம்மஞ்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த  ஜான் மேத்தீசும் (22) காதலித்து வந்தனர். அவரது தந்தை மாணிக்க தாஸ் டெய்லராக உள்ளார்.  ஜான்மேத்தீசும் அவரது கடையில் வேலை செய்து வந்தார். இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு  ஜெனிபர் புஷ்பா எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜெனிபர் காதலை முறித்துக் கொள்வோம் என்று ஜான்மேத்தீசிடம் கூறினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெனிபரின்  பிறந்தநாள் வந்தது. அப்போது கடைசியாக மாமல்லபுரத்தில் நாம் இருவரும் சந்தித்து விட்டு பின்னர் பிரிந்து விடுவோம் என்று ஜான்மேத்தீஷ் கூறினார். அப்போது உனக்கு நான் பரிசு ஒன்று கொடுக்கிறேன். அதை மட்டும் வாங்கி கொள் என்று மேத்தீஷ் கூறினார்.

இதனை நம்பி ஜெனிபர் மாமல்லபுரத்திற்கு சென்றார். இருவரும் புலிக்குகை அருகே பேசி கொண்டிருந்தனர். அப்போது பரிசு பொருள் இருப்பதாக கூறி அட்டை பெட்டியை மேத்தீஷ் காட்டினார்.

அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜெனிபரிடம் வற்புறுத்தினார். ஆனால் ஜெனிபர் அதனை ஏற்றுக்கொள்ள வில்லை. இதையடுத்து பரிசு பொருளையாவது வாங்கி கொள் என்று கூறி அட்டை பெட்டியை திறந்தார்.

அதில் இருந்த சுத்தியல் ஒன்றை எடுத்த மேத்தீஷ் திடீரென ஜெனிபர் தலையில் ஓங்கி அடித்தார். இதனை சற்றும் எதிர்பாராத ஜெனிபர் நிலைக்குலைந்தார். மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அவர் பலியானார்.

பின்னர் காதலியின் துப் பட்டாவை எடுத்து அவரது உடல் அருகே சவுக்கு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இருவரையும் காணாததால் குடும்பத்தினர் தேடினர். நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில்  மாமல்லபுரம் சென்றனர். அப்போது புலிக்குகை அருகில் மேத்தீஷ் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகே 2 பேரும் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. மாமல்லபுரம் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.