Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 22, 2017

இவனுங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா? தாஜ்மகாலுக்குள் முக்காடு போட்டு செல்ல எதிர்ப்பு இந்து அமைப்புகள் போராட்டம்


தாஜ்மகாலுக்குள் உலக அழகி போட்டி மாடல்கள் முக்காடு போட்டுச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்தது.

2017-ம் ஆண்டுக்கான ‘சூப்பர் மாடல்’ உலக அழகிப்போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 34 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். கடந்த 12-ந்தேதி முதல் அழகிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது. இன்று இறுதிப் போட்டி நடக்கிறது.

இதில் பங்கேற்ற வெளி நாட்டு அழகிகள் ஆக்ராவில் உள்ள சர்வதேச புகழ்பெற்ற புராதன சின்னமான தாஜ்மகாலை பார்வையிடச் சென்றனர்.

ஆக்ராவில் வெயில் சுட்டெரித்ததால் வெளிநாட்டு அழகிகள் முகத்தை துணியால் மூடியவாறு தாஜ்மகாலுக்குள் சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து முக்காடை எடுத்துவிட்டு செல்லுமாறு கூறினார்கள்.

இதனால் உலக அழகி போட்டியாளர்களுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக தொழில் பாதுகாப்புபடை அதிகாரிகள் கூறும்போது, புராதன சின்னங்கள், தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட இடங்களில் மதம் சம்பந்தமான நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே முக்காடு அணிய மறுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து மத்திய கலாச்சார துறை மந்திரி மகேஷ் சர்மா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் கூறுகையில், தாஜ்மகாலுக்குள் செல்ல எந்த ஆடை கட்டுப்பாடும் கிடையாது. எந்த கலர் உடை வேண்டுமானாலும் அணிந்து செல்லலாம். இது தொடர்பாக எந்த வழி காட்டுதலும் இல்லை. எனவே முக்காடு அணிந்து சென்றவர்களை தடுத்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

முன்னதாக ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு வெளி நாட்டு அழகிகள் முக்காடு அணிந்து சென்ற போது அதற்கு இந்து அமைப்புகளும், பா.ஜனதாவின் இளைஞர் அணியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். முக்காடு அணிவதை இந்துக்களின் ஒரு பிரிவினர் வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே முக்காடு அணிந்து தாஜ்மகாலுக்குள் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகே பாதுகாப்பு அதிகாரிகள் அழகிகள் முக்காடு அணிந்து செல்ல தடை விதித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.