டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் சாட்டையடி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் களத்தில் பிரதமர் நரேந்திர மோடி போன்று வேடமணிந்த விவசாயி ஒருவர், பிற விவசாயிகளை சாட்டையால் அடித்து துன்புறுத்துவது போன்று செய்கை செய்து வருகிறார்.
டெல்லியில் 36-வது நாளாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
எலிக்கறி, பாம்புக்கறி உண்ணும் போராட்டம் தொடங்கி நிர்வாணப் போராட்டம் வரை நடத்திவிட்டனர். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து சந்திக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் 36-வது நாளான இன்று, தமிழக விவசாயிகளில் ஒருவர், பிரதமர் மோடி போன்று வேடமணிந்து, பிற விவசாயிகளை சாட்டையால் அடித்து துன்புறுத்துகிறார். தங்களை அடிக்க வேண்டாம் என்று விவசாயிகள், மோடி போன்று வேடமணிந்தவரிடம் மன்றாடுகின்றனர். இவ்வாறு நடித்து விவசாயிகள் நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.