April 24, 2017
ஏய் இப்படியுமா செய்வீங்க, அடப்பாவிகளா..!? விசித்திர சம்பவம் அம்மாடியோவ்..!
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்து என்பார்கள். ஆனால் 30 பேருக்கு சாப்பாடு இல்லை என்பதற்காக ஒரு திருமணத்தை நிறுத்திவிட்டனா் மணமகன் வீட்டார். அந்த மணமகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
இப்படி ஒரு விசித்திர சம்பவம் வேறு எங்கும் நடக்கவில்லை. பொருளாதாரத்தில் வளா்ந்து வரும் பெங்களூருவில் தான் நடந்துள்ளது. மெத்த படித்த மேதாவிகள் இங்குதான் உள்ளனராம். நாகரீகத்தின் தொட்டில் என்று கூறப்பட்டு வருகிறது.
டெல்லிக்கு அடுத்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரம் பெங்களூருதான் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு பெங்களூருவில் வசித்து வரும் 29 வயது வாலிபருக்கும், ராமநகர் மாவட்டம் கனகபுராவில் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இவர்களின் திருமணம் நேற்று காலையில் கோனனகுண்டேயில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.
இதனால், நேற்று முன்தினம் இரவிலேயே மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் மண்டபத்துக்கு வந்திருந்தனர்.
அங்கு, அவர்களுக்கு மணப்பெண் வீட்டின் சார்பில் இரவு உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இரவு 10 மணியளவில் உணவு பற்றாக்குறையால் மணமகனின் உறவினர்கள் 30 பேருக்கு சாப்பாடு இல்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, மணமகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் மணமகனின் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மணமகன் மற்றும் அவருடைய பெற்றோரும் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து திருமணத்தை மணமகன் வீட்டார் நிறுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் வீட்டார், மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
திருமணம் நடைபெற வேண்டும் என அவர்கள் கெஞ்சினர். ஆனால், மணமகன் வீட்டார் திருமணத்துக்கு மறுத்துவிட்டனர். இதன் காரணமாக மணமகள் மற்றும் அவருடைய உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.
இருப்பினும், திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் நேற்று காலை வரை மனமகள் வீட்டார் திருமண மண்டபத்தில் காத்திருந்து மணமகன் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தகவல் அறிந்த போலீசாரும், அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மணமகன் வீட்டினர் மனம் இரங்கி வராததால் திருமணம் நடைபெறாமல் நின்றுபோனது. இந்த சம்பவம் நேற்று பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணின் வாழ்க்கை 30 பேரின் சாப்பாட்டால் சீரழிந்து விட்டது.
ஏய் இப்படியுமா செய்வீங்க, அடப்பாவிகளா..!? விசித்திர சம்பவம் அம்மாடியோவ்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 24, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.