Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 29, 2017

கொடநாடு காவலாளி கொலை.. மாஜி கார் டிரைவர் பலி.. ஜெ.வை சசி தாக்கியதை பார்த்த பணிப் பெண் கதி என்ன?


ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். அந்தக் கொலையில் தொடர்புள்ள கனகராஜ் சாலை விபத்தில் பலியாகியுள்ளார். இதனிடையே போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை தாக்கியதைப் பார்த்த ஒரே சாட்சி

 ஜெயலலிதா அப்போலோ மருத்தவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் சசிகலா மற்றும் அவரது குடும்பதினரால் போயஸ் கார்டனில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை நேரில் பார்த்த ஒரே சாட்சியம் என ஓபிஎஸ் கோஷ்டி கூறிவரும் பணிப் பெண்ணின் கதி என்ன? கேள்வி எழுத்துள்ளது.

ஜெயலலிதா இறந்த பிறகு அவர் சார்ந்த பல்வேறு மர்மங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. கடந்த 24ம் தேதி அவருக்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டார்.

கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவால் மறைத்து வைக்கப்பட்டது என்ன? ஏன் கொள்ளையர்கள் வந்தார்? என்னென்ன முக்கியமான ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பது பற்றி எந்தக் தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

 ஓம்பகதூர் கொலை
இதற்கிடையே, ஓம்பகதூர் கொலையில் தொடர்புடையதாகக் கூறி, ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் கனகராஜ் தேடப்பட்டு வந்தார். அவர் நேற்று இரவு மர்மான முறையில் இறந்துள்ளார். அவர் வாகன விபத்தில் இறந்தார் என்று போலீசார் சொல்கின்றனர். என்றாலும் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

 சாலை விபத்து
இதே போன்று கொடநாடு கொலையில் சம்பந்தப்பட்டதாக கேரளத்தைச் சேர்ந்த சயான் என்பவரும் தேடப்பட்டு வந்தார். இன்று நடைபெற்ற கார் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். அவரையும் கொலை செய்வதற்காகவே யாரோ திட்டமிட்டு சாலை விபத்தை நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.


சந்தேகம்
ஜெயலலிதாவின் பணியாளர்களாக இருந்த ஓம்பகதூர், ஜெயலலிதாவின் மாஜி டிரைவர் கனகராஜ் ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். கிஷன்பகதூரும், சயானும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, நமக்கு எழும் சந்தேகம், ஜெயலலிதா தாக்கப்பட்டதை நேரில் பார்த்த சாட்சியமாக ஓபிஎஸ் கோஷ்டி கூறும் அந்த போயஸ் கார்டன் பணிப் பெண்ணுக்கு என்ன நடந்தது? என்பதுதான்.

ஜெ. வீடு
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவிற்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாகவும், அப்போது சசிகலா ஜெயலலிதாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சண்டைகளை நேரடியாக பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்ட பணிப் பெண் எங்கே? ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று தலைமறைவாக வைக்கப்பட்டுள்ளாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.