Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 22, 2017

கோஹினூர் வைரத்தை மீட்க முடியுமா? உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு வைரத்தை மீட்க நடவடிக்கை மத்திய அரசு புருட?


பிரிட்டன் தலைநகர் லண்டனில் தற்போது உள்ள, இந்தியாவுக்கு சொந்தமான கோஹினுார் வைரத்தை மீட்க வேண்டும் என்ற வழக்கில், 'வெளிநாட்டில் உள்ள சொத்தை மீட்கும்படி உத்தரவிட முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

 மீட்க கோரிக்கை: உலகப் புகழ்பெற்ற, 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, கோஹினுார் வைரம், தற்போது, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ளது. தென்மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட, 108 காரட் எடையுள்ள இந்த வைரம், இந்திய மன்னர்கள் பலருடைய கை மாறி, தற்போது லண்டனில் உள்ளது. இதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன

. கேள்வி: இந்த வைரத்தை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வைரத்தை மீட்பது குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று, சுப்ரீம் கோர்ட், முன்பு கேள்வி எழுப்பியிருந்தது. 'வைரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக' மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 மனு தள்ளுபடி: இந்த நிலையில், இந்த வழக்கில், தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது: வெளிநாட்டில் உள்ள சொத்தை மீட்கும்படி கோர்ட்டால் உத்தரவிட முடியாது. இவ்வாறு பல்வேறு நாடுகளில் உள்ள சொத்துக்களை மீட்கக் கோரி பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதில் கோர்ட் தலையிட முடியாது என்று தெரிந்தும், இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோஹினுார் வைரத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மத்திய அரசு கூறியுள்ளது. அதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.